என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  அம்பலூர் ஊராட்சியில் முருங்கை செடிகள் விநியோகம்
  X

  திட்ட இயக்குனர் பொது மக்களுக்கு முருங்கை செடிகளை இலவசமாக வழங்கிய காட்சி.

  அம்பலூர் ஊராட்சியில் முருங்கை செடிகள் விநியோகம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பொது மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது
  • ஏராளமானோர் பலர் கலந்து கொண்டனர்

  வாணியம்பாடி:

  அம்பலூர் ஊராட்சியில் வளர்க்கப்பட்ட முருங்கை செடிகளை பொது மக்களுக்கு இலவசமாக மாவட்ட திட்ட இயக்குனர் வழங்கினார்.

  வாணியம்பாடி அடுத்த அம்பலூர் பகுதியில் ஊராட்சி மற்றும் மகளிர் குழு சார்பில் நடத்தப்பட்டு வரும் நர்சரியில், பல்வேறு வகையான செடிகள் வளர்க்கப்பட்டு வருகிறது.

  இந்த நிலையில், மேலும் கூடுதலாக ஒரு நர்சரியை துவக்கி வைத்து, அதில் ஜம்பு நாவல், புங்கை, வேப்பம், புளியன், பப்பாளி உள்ளிட்ட செடிகளை வளர்த்து பிற ஊராட்சிகளுக்கும் வழங்க வழிவகை செய்யும் வகையில், நர்சரி துவக்குவதற்கான பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது.

  பணிகள் நிறைவு பெற்ற நிலையில், நேற்று அம்பலூர் ஊராட்சி மன்ற பகுதியில் பல்வேறு திட்ட பணிகளை பார்வையிடுவதற்காக வந்த திருப்பத்தூர் மாவட்ட திட்ட இயக்குனர் செல்வராசு, புதிய நர்சரியை துவக்கி வைத்தார்.

  மேலும், மகளிர் குழுவினரின் நர்சரியில் ஏற்கனவே வளர்த்து வைக்கப்பட்டிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட முருங்கைச் செடிகளை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கினார்.

  இந்த நிகழ்ச்சியில், அம்பலூர் ஊராட்சி மன்ற தலைவர் ஏ.பி. முருகேசன், நாட்றம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் சித்ரகலா, உதவி பொறியாளர் சுதாகர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

  Next Story
  ×