என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஜோலார்பேட்டை பகுதியில் கட்டணம் செலுத்தாத வீட்டின் முன்பு இருந்த குடிநீர் இணைப்பு துண்டிப்பு பணியை நகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டனர்.
கட்டணம் செலுத்தாத வீட்டின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு
- நிலுவை இன்றி வரி செலுத்த வேண்டும்
- நகராட்சி ஆணையாளர் அறிவிப்பு
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பொதுமக்கள் சிலர் குடிநீர் கட்டணம், சொத்து வரி உள்ளிட்ட பல்வேறு வரிகள் செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளனர். நகராட்சி ஆணையாளர் பழனி, பொது மக்கள் நிலுவை இன்றி வரி செலுத்த வேண்டும் என ஆட்டோ மூலம் அறிவிப்பு செய்தார். ஆனாலும் சிலர் குடிநீர் கட்டணம் உள்ளிட்ட வரிகளை செலுத்தவில்லை.
அதைத்தொடர்ந்து ஆணையாளர் பழனி உத்தரவின்பேரில், பொறியாளர் கோபு, மேலாளர் தங்கராஜ், வருவாய் ஆய்வாளர் (பொறுப்பு) முரளி உள்ளிட்ட நகராட்சி ஊழி யர்கள் 10-வது வார்டு பகுதிகளான சொரங்கன் வட்டம் மற்றும் ஊசி நாட்டான் வட்டம் பகுதிக்கு சென்று குடிநீர் கட்டணம் செலுத்தாத வீட்டின் குடிநீர் இணைப்புகளை துண்டித்தனர்.
இதன் எதிரொலியாக நேற்று ஜோலார்பேட்டை நகராட்சி பகுதியில் ஒரு நாளில் குடிநீர் கட்டணம், சொத்து வரி ரூ.2 ½ லட்சம் வசூலானது.
இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் பழனி கூறுகையில்:-
பொதுமக்கள் தாங்கள் செலுத்த வேண்டிய வரிகள் உடனடியாக நிலுவை இன்றி செலுத்தி, குடிநீர் இணைப்பு துண்டிப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் ஜோலார்பேட்டை நகராட்சி வளர்ச்சிக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றார்.






