search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சார் பதிவாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
    X

    சார் பதிவாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    • 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கோஷம் எழுப்பினர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    திருப்பத்தூர்:

    தமிழ்நாடு சார்பதிவாளர்கள் சங்கம் திருப்பத்தூர் பதிவு மாவட்டம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு திருப்பத்தூர் சார் பதிவாளர் கோ.நித்தியானந்தம், அனைவரையும் வரவேற்றார்.

    தமிழ்நாடு சார் பதிவாளர்கள் சங்க மாவட்ட அமைப்பாளரும் இரா.ரமேஷ்குமார் தலைமை வகித்து கண்டன ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

    மாவட்ட பதிவாளர் அலுவலகம் உதவியாளர் இரா.சேகர், முன்னிலை வகித்தார்.

    தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் கே. எம். நேரு, மாவட்டச் செயலாளர் க.அருள்மொழிவர்மன், மாநில செயற்குழு உறுப்பினர், த.பாண்டியன், திருப்பத்தூர் மாவட்ட வருவாய் துறை அலுவலர்கள் சங்கம் மாவட்ட செயலாளர்ஜி.திருமலை, திருப்பத்தூர் மாவட்டம் பட்டு வளர்ச்சி துறை தலைவர் க.ரா.ராஜ்குமார், கூட்டுறவுத்துறை மாவட்ட செயலாளர், கா.பூவண்ணன், உட்பட பலர் பேசினார்கள்.

    ஆர்ப்பாட்டத்தில், ஏழை, எளிய மக்கள் மனைகளாக பதி வதில் உள்ள குளறுபடிகளை நீக்க வேண்டும், அதிகரித்து வரும் மக்கள் தேவைக்கேற்ப புதிய பணியிடங்களை உரு வாக்கவும், காலிப்பணியிடங்களை நிரப்பவும், படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும், பதிவுத்துறையில் தனியார் மூலம் செயல்படுத்தி கொண்டிருக்கும் ஒப்பந்த வெளி முகமை வேலைகளை ரத்து செய்து அரசு நிறுவனங்கள் மூலம் கணினி மயமாக்கப்பட வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைளை நிறைவேற்றக்கோரி கோஷங்கள் எழுப்பினார்கள்.

    ஆர்ப்பாட்டத்தில் சார்பதிவாளர்கள் அமைச்சுப்பணியாளர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர் மாவட்ட பதிவாளர் அலுவலகம், பெ.அருணா நன்றி கூறினார்.

    Next Story
    ×