என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆதிதிராவிடர் மாணவிகள் விடுதியில் கலெக்டர் ஆய்வு
- குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் வழங்கினார்
- அதிகாரிகள் உடன் சென்றனர்
திருப்பத்தூர்:
திருப்பத்தூரில் உள்ள ஆதிதிராவிடர் நல மாணவிகள் விடுதியை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகளுக்கு மதிய உணவினை வழங்கி அவர்களுடன் உணவு அருந்தினார். ஆய்வின் போது உணவினை சுகாதாரமான முறையில் தயா ரித்து உரிய நேரத்தில் வழங்கவும் உத்தரவிட்டார்.
மேலும் மாணவிகள் தங்கும் அறைகள், கழிவறைகள், விடுதி வளாகத்தில் சில இடங்களில் தூய்மை இல்லாமல் இருந்தது. இதனை உடனே தூய்மை செய்ய உத்தரவிட்டார். பின் மாணவிகளின் குறைகளை கேட்டறிந்து தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றி தரப்படும் என தெரிவித்தார். மாலையில் மாணவிகளுக்கு தேவையான ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம், போர்வைகள் தலையணைகள் தட்டு, உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.
ஆய்வின்போது மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ஜெயகுமார், விடுதி காப்பாளர் கலைச்செல்வி ஆகியோர் உடன் இருந்தனர்.