என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ரெயிலில் கஞ்சா கடத்தியவர் கைது
  X

  ரெயிலில் கஞ்சா கடத்தியவர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 6 கிலோ கஞ்சா பறிமுதல்
  • போலீசார் விசாரணை

  ஜோலார்பேட்டை:

  சேலம் உட்கோட்ட ரெயில்வே போலீஸ் சிறப்பு பிரிவு தனிப்படையினர் சப் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் நேற்று காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து சேலம் ரெயில் நிலையம் வரை செல்லும் ஓடும் ரெயிலில் கஞ்சா மற்றும் போதை பொருள்கள் கடத்தப்படுகிறதா என சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

  இந்நிலையில் நேற்று ஜார்க்கண்ட மாநிலம் தன்பாத் ரெயில் நிலையத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழா வரை செல்லும் விரைவு வண்டியில் தனிப்படையினர் சோதனை செய்து கொண்டு இருந்தனர் அப்போது முன் பதிவு செய்யப்பட்ட எஸ் 8 பெட்டியில் சந்தேகத்தின் பேரில் கழிவறை அருகே நின்று கொண்டு இருந்த வாலிபரை விசாரணை செய்ததில் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். இதனால் அவரது உடமைகளை சோதனை செய்யும் போது தான் வைத்திருந்த சோல்டர் பையில் கஞ்சா வைத்துயிருந்தது தெரிய வந்தது இதனையடுத்து தனிப்படை போலீசார் இருவரையும் ஜோலார்பேட்டை ரெயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

  இது சம்பந்தமாக ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி மற்றும் சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் விசாரணை செய்ததில் ஒரிசா மாநிலம் போடன் அடுத்த துபா தன்பதி பகுதியை சேர்ந்தவர் ராமேஸ்வர் சாஹூ இவரது மகன் மகேந்திர சாஹூ (வயது 32) என தெரிய வந்தது.

  மேலும் இவரிடமிருந்து உடமைகளை சோதனை செய்யும் போது 6 கிலோ கஞ்சாவை விசாகப்பட்டினத்தில் இருந்து ஈரோடு பகுதிக்கு கடத்தியதாக ஒப்புக்கொண்டனர் இதனையடுத்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் ஓடும் ரெயிலில் கஞ்சா கடத்தியதாக ஒரிசா மாநில வாலிபர் மீது வழக்கு பதிவு செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் மேலும் இவரிடமிருந்து 6 கிலோ கஞ்சாவை ரெயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.

  Next Story
  ×