என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆம்பூர் அருகே கோவிலில் அம்மன் நகை திருட்டு
    X

    திருட்டு நடந்த கோவில்

    ஆம்பூர் அருகே கோவிலில் அம்மன் நகை திருட்டு

    • இன்றும் நாளையும் திருவிழா நடக்க ஏற்பாடு
    • 4 கிராம் தங்க தாலி அபேஸ்

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த வெங்கடசமுத்திரம் ஊராட்சியில் உள்ள இந்திரா நகரில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இன்றும் நாளையும் திருவிழா நடக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    இந்நிலையில், நேற்று மாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்ய சென்ற போது அம்மன் கழுத்தில் இருந்த 4 கிராம் தங்க தாலி திருட்டு போயிருப்பது தெரியவந்தது.

    இதை தொடர்ந்து ஊர் நாட்டாண்மை பழனி உமராபாத் போலீசில் இதுகுறித்து புகார் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×