search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலிபர் சாவு குறித்து வதந்தி பரப்பினால் நடவடிக்கை
    X

    திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் வாலிபரின் உறவினர்கள் முற்றுகையிட்டு போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    வாலிபர் சாவு குறித்து வதந்தி பரப்பினால் நடவடிக்கை

    • போலீஸ் சூப்பிரண்டு கடும் எச்சரிக்கை
    • போலீசார் மீது காளைகளை அவிழ்த்து விட்டனர்

    திருப்பத்தூர்:

    நாட்டறம்பள்ளி அருகே வாலிபர் மாடு விடும் விழாவில் பலியான சம்பவம் குறித்து திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    கல்நார்சாம்பட்டி கிராமத்தில் எருதுவிடும் விழாவில் மொத்தம் 200 மாடுகள் ஓடுவதற்கு அட்டை வழங்கப்பட்டு அதில் 150 மாடுகள் மட்டும் நேற்று மதியம் 2.30 மணி வரை ஓடவிடப்பட்டது. பின்னர் விழா குழுவினரின் வேண்டுகோளுக்கிணங்க 2-வது சுற்றுக்கு செல்லாத காரணத்தால் 3 மாடுகள் மட்டும் 2.45 மணிக்கு மீண்டும் தாசில்தார் உத்தரவின் பேரில் ஓட அனுமதி வழங்கப்பட்டது

    . பின்னர் விழா குழுவினர் எருதுவிடும் விழா முடிவடைந்ததாக அறிவித்தனர். அதனை ஏற்றுக்கொள்ளாத சில மாடுகளின் உரிமையா ளர்கள் தங்களுடைய மாடுகள் ஓட அனுமதி கோரியதற்கு அனுமதி வழங்கவில்லை.

    இதனால் அங்கிருந்த மாட்டின் உரிமையாளர்களில் ஒரு சிலர் மாடுகளை வேண்டும் என்றே போலீஸ் மற்றும் மக்கள் நின்று இருந்த ஓடுபாதையில் அவிழ்த்து விட்டனர். பாதையில் இருந்தவர்கள் கலைந்து ஓடினர்.

    பின்னர் சில நிமிடங்கள் கழித்து இடது பக்கத்தி லிருந்து சுமார் 70 மீட்டர் தொலைவில் காயம்பட்டிருந்த ஒருவரை தூக்கி வந்தனர். அவரை பற்றி விசாரித்த போது முஷ்ரப் என்றனர்., அவரை உடனடியாக சிகிச்சைக்காக புதுப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்து வமனைக்கு கெர்ணடு செல்லப்பட்டார். அங்கு அவருடைய வலதுபக்க வயிற்று பகுதியில் 4x2 சென்டிமீட்டர் அளவிற்கு குத்தப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் மருத்துவ தகவலறிக்கையில் பதிவு செய்து உள்ளனர். மேலும் தொடர்ந்து சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.

    இதன் காரணமாக சம்பவ இடத்தில் இருந்த மாட்டின் உரிமையாளர்கள் தங்கள் மாடுகளை ஓட அனுமதிக்காததன் காரணமாக காவல்துறை தாக்கியதால் தான் இறந்ததாக பொய்யான தகவலை பரப்பினர்

    இதன் காரணமாக விழா குழவினர் வருவாய்த்து றையினர் மற்றும் காவல்து றையினர் காயம்பட்ட நபரின் குடும்பத்தினரிடம் கல்நார்சாம்பட்டி நடுநிலைப்பள்ளி உள்ளே திருப்பத்தூர் கோட்டாட்சியர் லட்சுமி மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப் போது சுமார் 300 பேர் திடீரென்று கல்வீசி தாக்குதல் நடத்தினர். அதில் ஆயுதப்படை காவலர் திருமால் என்பவருக்கு வலதுபக்க கண்புருவத்தில் காயம் ஏற்பட்டது.

    தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக உண்மைக்கு புறம்பான தகவல்கள் மற்றும் வதந்திகள் பரப்புவர்கள் மீது சட்ட ரீதியாக தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    Next Story
    ×