என் மலர்
உள்ளூர் செய்திகள்

55-வது தேசிய நூலக வார விழா
- மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வாணியம்பாடி:
வாணியம்பாடியில் 55 வது தேசிய நூலக வார விழா முழுநேர கிளை நூலகத்தில் வாசகர் வட்ட தலைவர் பார்த்திபன் தலைமையில் நடைபெற்றது.
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஓவியப்போட்டி மற்றும் கட்டுரைப் போட்டி பள்ளிகளில் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் அனைவருக்கும் பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கினர். இந்த நிகழ்சியில் நல்நூலகர் மணிமாலா வரவேற்று பேசினார்.
வாணியம்பாடி சரக போலீஸ் துணை சூப்பி ரண்டு சுரேஷ்பாண்டியன், ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். பசுபதி ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில் சமூக ஆர்வலர் நரிநயீம், ரோட்டரி ஆளுநர் சக்கரவர்த்தி, நல்லாசிரியர் ரவிச்சந்திரன், யோகா ஆசிரியர் வெங்கடாசலம், தமிழாசிரியர்கள் அன்பரசு, கோட்டீஸ்வரன், எழுத்தாளர் சுகந்தி மகா லிங்கம், நூலகப்பணியாளர் காயத்ரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் நூலகர் விஜயகுமார் நன்றி கூறினார்.






