என் மலர்
உள்ளூர் செய்திகள்

போடியில் நடந்த தைராய்டு பரிசோதனை முகாமினை டி.எஸ்.பி சுரேஷ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
தேனியில் தைராய்டு பரிசோதனை முகாம்
- தேனியில் உள்ள நட்டாத்தி நாடார் மருத்துவ மனை சார்பில் போடியில் தைராய்டு நோய்க்கான பரிசோதனை முகாம் நடைபெற்றது.
- முகாமில் கலந்து கொண்ட 220 பேர்களுக்கும் சலுகை கட்டணத்தில் ரத்தப்பரிசோதனை செய்யப்பட்டன.
தேனி:
தேனியில் உள்ள நட்டாத்தி நாடார் மருத்துவ மனை சார்பில் போடியில் தைராய்டு நோய்க்கான பரிசோதனை முகாம் நடைபெற்றது.
போடியில் பஸ் நிலையம் பின்புறம் உள்ள நியூ விஜயா ஹோட்டல் அரங்கில் நடைபெற்ற முகாமை போடி டி.எஸ்.பி சுரேஷ் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். மருத்துவமனையின் நிர்வாக க்குழு உறுப்பின ர்கள் செந்தில் மற்றும் அமுதுபூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் தைராய்டு நோய்க்கான அறுவை சிகிச்சை சூப்பர் ஸ்பெஷா லிட்டி டாக்டர். முத்துக்குமார் கலந்து கொண்டு நோயாளி களை பரிசோதனை செய்து ஆலோசனைகள் வழங்கி னார்.
முகாமில் மிகுந்த அசதி, திடீரென உடல் பருமன், ஹார்மோன் குறைபாடி னால் முடி உதிர்தல், கழுத்துப்பகுதியில் வீக்கம், குரலில் மாற்றம், மாதவிடாய் பிரச்சினைகள், சிறுவர்க ளின் அதிகப்படியான மார்பு வளர்ச்சி, கணையம், மார்பகப்புற்றுநோய், சினைப்பை கட்டி, ஹார்மோன் குறைபாடி னால் குழந்தையின்மை, நாளமில்லா சுரப்பிகள் போன்ற ஹார்மோன் குறைபாடுகள் உள்ளவர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டார்கள்.
முகாமில் கலந்து கொண்ட 220 பேர்களுக்கும் சலுகை கட்டணத்தில் ரத்தப்பரிசோதனை செய்யப்பட்டன. இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனை மக்கள் தொடர்பு அலுவலர்கள் சலீம், ஷேக் பரீத், தீபன் ஆகியோர் செய்திருந்தனர்.






