என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலி குறுந்தகவல்கள் மூலம்   கிருஷ்ணகிரி பெண், வாலிபரிடம்  ரூ.6 லட்சம் மோசடி
    X

    போலி குறுந்தகவல்கள் மூலம் கிருஷ்ணகிரி பெண், வாலிபரிடம் ரூ.6 லட்சம் மோசடி

    • ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்கியதில் அதிர்ஷ்டசாலியாக தேர்வாகியுள்ளதாகவும் ரூ.12.8 லட்சம் பரிசு விழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • பணத்தை செலுத்திய ஆதிலட்சுமி பல நாட்களாகியும் எந்த வித பதிலும் வராமல் ஏமாற்றமடைந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகேயுள்ள பேரிகை போலீஸ் ஸ்டேஷன் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஆதிலட்சுமி (வயது 28).

    இவருக்கு வந்த ஒரு குறுந்தகவலில் ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்கியதில் அதிர்ஷ்டசாலியாக தேர்வாகியுள்ளதாகவும் ரூ.12.8 லட்சம் பரிசு விழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து அந்த எண்ணுக்கு ஆதி லட்சுமி தொடர்புகொண்ட பொது பரிசைப்பெற வாரியாக ரூ.4.22 லட்சம் கட்ட வேணும் என்று தெரிவித்துள்ளனர். இதை நம்பி பணத்தை செலுத்திய ஆதிலட்சுமி பல நாட்களாகியும் எந்த வித பதிலும் வராமல் ஏமாற்றமடைந்தார். இது குறித்து கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்துள்ளார்.

    இதேபோல காவேரிப்பட்டினம் கோவிந்தராஜபுரம் விரிவாக்க பகுதியை சேர்ந்த பட்டதாரி வாலிபர் சிலம்பரசனுக்கு வந்த குறுந்தகவலை நம்பி தினசரி வருமானம் கிடைக்கும் என்று ஆசைப்பட்டு ரூ.1.85 லட்சம் பணம் செலுத்தியுள்ளார்.

    அதன்பிறகு அந்த எண்ணை அவரால் தொடர்பு கொள்ள முடியவில்லை. இது குறித்து சிலம்பரசன் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்துள்ளார். 2 புகார்கள் குறித்தும் இன்ஸ்பெக்டர் காந்திமதி விசாரனை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×