என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாலிகிராமத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம்- 3 பேர் கைது
- வாடிக்கையாளர்கள் சிலர் அழகிகளுடன் விபசாரத்தில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
- கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 2 அழகிகள் உள்பட 3 இளம்பெண்களை போலீசார் மீட்டு மைலாப்பூரில் உள்ள அரசு காப்பகத்தில் சேர்த்தனர்.
போரூர்:
சென்னை சாலிகிராமம் பாஸ்கர் காலனி பகுதியில் விபசாரம் நடப்பதாக வளசரவாக்கம் உதவி கமிஷனர் கவுதமனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் நேற்று மாலை அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் ஆட்கள் நடமாட்டம் சந்தேகப்படும்படி இருந்தது.
இதையடுத்து போலீசார் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள அறையில் வாடிக்கையாளர்கள் சிலர் அழகிகளுடன் விபசாரத்தில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அடுக்குமாடி குடியிருப்பை வாடகைக்கு எடுத்து விபசாரம் நடத்தி வந்த ஜாபர்கான்பேட்டை பகுதியை சேர்ந்த வெஸ்லி கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மேலாளர் மணிகண்டன் பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஊழியர் காட்சன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.5 ஆயிரம் ரொக்கம், 5 செல்போன்கள், ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 2 அழகிகள் உள்பட 3 இளம்பெண்களை போலீசார் மீட்டு மைலாப்பூரில் உள்ள அரசு காப்பகத்தில் சேர்த்தனர்.






