என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல் அருகே பெண்ணை மிரட்டிய 20 பேர் மீது வழக்கு
    X

    கோப்பு படம்

    திண்டுக்கல் அருகே பெண்ணை மிரட்டிய 20 பேர் மீது வழக்கு

    • முன்விரோதம் காரணமாக பெண் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது புகார் அளிக்கப்பட்டது.
    • போலீசார் 20 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    பெரும்பாறை:

    திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை அருகில் உள்ள குப்பம்மாள்பட்டியை சேர்ந்த பாண்டி மகன் வினித்ராஜா(24). இவருக்கும் அதேஊரை சேர்ந்த சின்னக்காளை மகன் முத்துப்பாண்டி(28) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் வினித்ராஜாவுக்கு முத்துப்பாண்டி கொலை மிரட்டல் விடுத்தார்.

    இதுகுறித்து தாண்டிக்குடி போலீசார் முத்துப்பாண்டி மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த வினித்ராஜா, அவரது நண்பர் மணிகண்டன் மற்றும் 20 பேர் முத்துப்பாண்டி வீட்டிற்கு சென்றனர். அங்கு அவரது மனைவி வளர்மதியிடம் உனது கணவர் எங்கே என கேட்டு தகராறு செய்தனர்.

    அவர் தனது கணவர் வெளியில் சென்றுவிட்டார் என தெரிவித்தபோதும் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து வளர்மதி கொடுத்த புகாரின்பேரில் தாண்டிக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×