search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மருத்துவ குடியிருப்பை சீரமைக்க பொதுமக்கள் ேகாரிக்கை
    X

    மருத்துவ குடியிருப்பை சீரமைக்க பொதுமக்கள் ேகாரிக்கை

    • மருத்துவமனையில், சிறப்பாக பணியாற்ற கூடிய பல இளம் மருத்துவர்கள், பணியாற்றினாலும் அவர்கள் தங்குவதற்கு போதுமான குடியிருப்பு வசதிகள் இல்லாமல், சிரமம் அடைந்து வருகிறார்கள்.
    • நன்னிலத்தில் மருத்துவ குடியிருப்பை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகாவில், தலைமை இடத்தில் அமைந்துள்ள, அரசு மருத்துவமனை, தாலுக்கா தலைமை மருத்துவமனை ஆகும். இம்மருத்துவமனையில், முதுகலை மருத்துவர்கள், சிறப்பு மருத்துவர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள், குழந்தை மருத்துவர்கள், சித்த மருத்துவர், பல் மருத்துவர், உள்ளிட்ட மருத்துவர்கள் பணியாற்றி வருகிறார்கள். இங்கு அறுவை சிகிச்சை கூடம், எக்ஸ்ரே கருவி, பரிசோதனை நிலையங்கள் அமைந்துள்ளன.

    இம் மருத்துவமனைக்கு சொந்தமான, மருத்துவ குடியிருப்பு ஒன்று, மருத்துவமனைக்கு எதிரே உள்ள, மடவிளாகம் தெருவில் அமைந்துள்ளது. இந்த மருத்துவ குடியிருப்பில், மகப்பேறு மருத்துவ நிபுணர்கள், குடியிருப்பில் தங்கி, இம்மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளார்கள். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு, இருந்த ஒரு பெண் மருத்துவர், பணி மாறுதலுக்கு சென்றபின்பு, மருத்துவமனைக்கு வந்த மருத்துவர்கள் யாரும், இந்த குடியிருப்பில் தங்காமல், குடியிருப்பு பயன்பாடு இல்லாமல், மூடி கிடந்த நிலையில், தற்போது இந்த குடியிருப்பு, முற்றிலுமாக சிதலமடைந்து, சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.

    மருத்துவமனையில், சிறப்பாக பணியாற்ற கூடிய பல இளம் மருத்துவர்கள், பணியாற்றினாலும் அவர்கள் தங்குவதற்கு போதுமான குடியிருப்பு வசதிகள் இல்லாமல், சிரமம் அடைந்து வருகிறார்கள். இந்த குடியிருப்பை புதுப்பித்து மருத்துவர்கள் தங்கும் வகையில், ஏற்பாடு செய்து தரப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×