என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிறுமியை கர்ப்பிமாக்கிய வாலிபர்
- போக்சோவில் வழக்கு பதிவு
- போலீசார் தலைமறைவானவரை தேடி வருகின்றனர்
செய்யாறு:
செய்யாறு அடுத்த மேல் நெமிலி சேர்ந்தவர் சரண்ராஜ் (வயது 22). இவர் பெங்களூருவில் புதிய கட்டிடங்களுக்கு கம்பி கட்டும் வேலை செய்து வருகிறார்.
ஆசை வார்த்தை
அதே பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சிறுமி பிளஸ் 2 முடித்து விட்டு வீட்டிலிருந்து வந்தார். வாலிபரும், சிறுமியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சரண்ராஜ் சிறுமியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். மேலும் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அடிக்கடி உல்லாசத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் சிறுமி உடல் நலம் பாதிக்கப்பட்டார். இதையடுத்து பெற்றோர் அவரை வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அப்போது டாக்டர்கள் பரிசோதனை செய்த போது சிறுமி 4 மாத கர்ப்பிணியாக இருந்தது தெரிய வந்தது. இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து செய்யாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர்.
போலீசார் போக்சோவில் வழக்கு பதிவு செய்து தலைமறைவான சரண்ராஜை தேடி வருகின்றனர்.






