என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலை விரிவாக்க பணிகளை அம்பேத்குமார் எம்.எல்.ஏ. ஆய்வு
    X

    சாலை விரிவாக்க பணிகளை அம்பேத்குமார் எம்.எல்.ஏ. ஆய்வு

    • சாலையின் தடுப்பு சுவர்கள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்
    • நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கூறினார்

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த கீழ் சாத்தமங்கலம் கிராமம் அருகே நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது.

    இப்பணிகளை வந்தவாசி எம்.எல்.ஏ அம்பேத்குமார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்/ அப்போது சாலை விரிவாக்கம் பணிகள் எவ்வாறு நடைபெறுகிறது என்று நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளரிடம் கேட்டார்.

    பின்னர் விபத்துக்கள் ஏற்படாமல் இருக்கும் வகையில் சாலையின் தடுப்பு சுவர்கள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கூறினார்.

    ஆய்வின் போது திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளர் எம்.எஸ் தரணிவேந்தன், நகர செயலாளர் தயாளன், ஒன்றிய செயலாளர் ஆர்யாத்தூர் பெருமாள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×