search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் ஆடிவெள்ளி நாளை தொடங்கி 7 வாரங்கள் நடக்கிறது
    X

    படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் ஆடிவெள்ளி நாளை தொடங்கி 7 வாரங்கள் நடக்கிறது

    • 1008 சிவாலயங்கள் 108 விஷ்ணு திவ்ய தேசங்கள் சென்று வழிபாடு செய்த பலன் உண்டாகும்
    • கமண்டல நதியிலிருந்து புனித நீர் கொண்டு வரப்படுகிறது

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் ஆடி வெள்ளி விழா நாளை தொடங்கி 7 வாரங்கள் நடைபெற உள்ளது.

    64 சக்தி பீடங்களில் ஒன்றாக அம்மன் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளுடன் அம்மன் சிரசு சுயம்புவாய் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள்.

    கருவறையில் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்த பாணலிங்கம், ஜனாஆகர்ஷன சக்கரமும் அமைந்துள்ளது. ஜமதக்னி முனிவர் யாகம் செய்த இடத்தில் வருடந்தோறும் ஆனி திருமஞ்சனத்தன்று வெட்டி எடுத்து வரப்படும் மண்ணே இச் சன்னதியில் திருநீராக வழங்கப்படுகிறது.

    இங்கு வழிபாடு செய்தால் 1008 சிவாலயங்கள் 108 விஷ்ணு திவ்ய தேசங்கள் சென்று வழிபாடு செய்த பலன் உண்டாகும் என ஞானியர்கள் கூறியுள்ளனர்.

    ரேணுகம்பாள் கோவிலில் நாளை 21-ந் தேதி தொடங்கி, செப்டம்பர் 1-ந்தேதி வரை 7 ெவள்ளிக்கிழமைகளில் ஆடிவெள்ளி திருவிழா நடைபெற உள்ளது.

    இதைமுன்னிட்டு வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை படவேடு கமண்டல நதியிலிருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்து தீபாராதனை நடக்கிறது.

    இவ்விழா நடைபெறும் முதல் வெள்ளி இரவில் அன்ன வாகனத்தில் சரஸ்வதி அலங்காரத்தில் வீதி உலாவும், 2-வது வெள்ளி 28-ந் தேதி இரவு சிம்ம வாகனத்தில் துர்க்கை அலங்காரத்திலும், 4.8.23-ந்தேதி இரவில் காமதேனு வாகனத்தில் சிவலிங்க ஆலிங்கன பூஜை அலங்காரத்திலும், 4-வது வெள்ளி 11-ந் தேதி நாக வாகனத்தில் மகாலட்சுமி அலங்காரத்திலும், 5-வது வெள்ளி 18-ந் தேதி இரவில் குதிரை வாகனத்தில் மகிஷாசூரமர்த்தினி அலங்காரத்திலும், 6-வது வெள்ளி 25-ந் தேதி முத்து ரதத்தில் ராஜராஜேஸ்வரி அலங்காரத்திலும், செப் 15-ந் ேததி 7-வது வெள்ளியன்று உற்சவம் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் (கூடுதல் பொறுப்பு) இ.ஜீவானந்தம், செயல் அலுவலர் சிவஞானம் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×