என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பஸ்சில் மழைநீர் ஒழுகியதால் குடை பிடித்து சென்ற பயணிகள்
    X

    பஸ்சில் குடைபிடித்து சென்ற பயணியை படத்தில் காணலாம்.

    அரசு பஸ்சில் மழைநீர் ஒழுகியதால் குடை பிடித்து சென்ற பயணிகள்

    • வேலூரில் இருந்து வந்தவாசி வழியாக சென்றது
    • பஸ்களை சரி செய்ய வலியுறுத்தல்

    வந்தவாசி:

    வேலூரில் இருந்து ஆற்காடு, செய்யாறு, வந்தவாசி வழியாக மேல்மருவத்தூருக்கு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது வந்தவாசியில் பலத்த மழை பெய்தது. இதனால் பஸ்சின் உள்ளே மழை நீர் ஒழுகியது. பஸ்சில் பயணம் செய்த சில பயணிகள் பஸ்சில் உள்ளே குடை பிடித்துக்கொண்டு பெரும் சிரமத்துடன் சென்றனர்.

    போக்குவரத்து துறை நிர்வாகம் அரசு பஸ்களை முறையாக பராமரிப்பு செய்யாத காரணத்தால் பஸ் முழுவதும் மழைநீர் ஒழுகும் அவல நிலை ஏற்பட்டது.

    எனவே அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து மழைக்காலங்களில் ஒழுகும் நிலையில் இருக்கும் அரசு பஸ்களை சரி செய்ய வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×