search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சீட்டு நிறுவனம் நடத்தி பணம் மோசடி
    X

    சீட்டு நிறுவனம் நடத்தி பணம் மோசடி

    • பொதுமக்கள் சாலை மறியல்
    • போக்குவரத்து பாதிப்பு

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி மற்றும் செய்யாறு பகுதிகளில் சம்சு மொய்தின் என்பவர் சீட்டு நிறுவனம் நடத்தி வந்தார்.

    இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைகளில் தங்கம், வெள்ளி பொருட்கள், திருமண சீர்வரிசை சாமான்கள் மற்றும் மளிகை பொருட்கள் உள்ளிட்ட கவர்ச்சிகரமான பொருட்கள் தருவதாக கூறி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

    அதன்படி ஏராளமானோர் ஏஜென்ட் மூலமாக செலுத்தி உள்ளனர். இந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு தனியார் சீட்டு நிறுவனர் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மூடப்பட்டது.

    மேலும் அதன் உரிமையாளர் தலைமறைவாகிவிட்டார். இதனால் பணம் கொடுத்து ஏமாந்த பொதுமக்கள் திருவண்ணாமலை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் கொத்தனர்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி தனியார் சீட்டு நிறுவனர் சம்சு மொய்தினை கைது செய்தனர்.

    இழந்த பணத்தை மீட்டுத் தரக் கோரி பாதிக்கப்பட்ட மக்கள் கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் போராட்டங்கள் நடத்தினர். இருப்பினும் அவர்களுக்கு பணம் திரும்ப கொடுக்க ப்படவில்லை.

    இதனால் மேலும் ஆத்திரமடைந்த பொது மக்கள் 300-க்கும் மேற்பட்டோர் வந்தவாசி -ஆரணி சாலையில் திடீரென குவிந்து மறியலில் ஈடுபட்டனர்.

    மேலும் தனியார் சீட்டு நிறுவனத்திடம் இருந்து பணத்தை மீட்டு தர வேண்டும் என கோஷமிட்டனர்.

    தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடம் சமரசம் பேசினர்.

    மேலும் உயர் அதிகாரிகளிடம் கூறி விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

    இதனைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் வந்தவாசி - ஆரணி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×