search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிரிவலப்பாதையில் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
    X

    கிரிவலப்பாதையில் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்த காட்சி.

    கிரிவலப்பாதையில் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

    • கார்த்திகை தீப திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்
    • அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திரு விழாவை முன்னிட்டு கிரிவலப்பாதையில் கிரிவல பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.

    கார்த்திகை தீப திருவிழாவிற்கு வரும் ஆன்மீக பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து கொண்டே வருகிறது.

    கடந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழா பாதுகாப்போடும், ஆன்மிக மக்கள் எல்லாம் பாராட்டும் அளவிற்கு சிறப்பாக நடை பெற்றது என தமிழ்நாடு முதல் - அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.

    இந்த ஆண்டு தீபத்திருவிழா வெகு சிறப்பாக நடைபெற வேண்டும் என கூறிய முதல் - அமைச்சர் கார்த்திகை தீபத்திருவிழா முடியும் வரை திருவண்ணாமலையில் தங்கி இருந்து பணிகளை கவனிக்க சொல்லி யிருக்கிறார்.

    அதன் அடிப்படையில் இன்று கிரிவலப்பாதையில் செய்யப்பட வேண்டிய பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு செய்யப்பட்டது.

    கார்த்திகை தீபத் திருவிழாவின் பிரதானமாக பார்க்கப்படுவது 14 கிலோ மீட்டர் தூரம் உள்ள அண்ணாமலையை சுற்றி கிரிவலம் வருவது தான். 14 கிலோ மீட்டர் தூரம் உள்ள கிரிவலப்பாதையில் ஆன்மிக மக்கள் காலணி அணியாமல் கிரிவலம் வருகின்றனர்.

    அதனால் பாதைகள் அனைத்தும் தூய்மையாக வைக்கப்படும். 24 மணி நேரமும் பக்தர்கள் கிரிவலம் வருவதால் இரவு நேரங்களில் தேவையான அளவு மின்விளக்கு வசதி செய்யப்பட்டுள்ளது. தேவையான அளவிற்கு கழிப்பிட வசதி மற்றும் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் நிதியில் இருந்து கிரிவல ப்பாதையில் கேமராக்கள் அமைக்க நிதிகள் வழங்கப்பட்டு அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.

    தமிழ்நாடு போலீஸ் ஸ்காட்லாந்து போலீசுக்கு இணையானவர்கள். கிரிவலம் வரும் பக்தர்களின் பாதுகாப்பிற்காகவும் சிறு சிறு குற்ற சம்பவங்கள் கூட நடைபெறாமல் தடுக்கவும் காவலர்கள் சாதாரண உடையில் மக்களோடு மக்களாக கலந்து கண்காணிப்பு பணியில் இந்த ஆண்டு ஈடுபடுவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

    கலெக்டர் பா,முருகேஷ், சி.என்.அண்ணாதுரை எம்பி, மாநில தடகள சங்க துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், தொழிலாளர் நல மேம்பாட்டு பிரிவு அரசு பிரதிநிதி இரா.ஸ்ரீதரன், நகராட்சி ஆணையாளர் ந.தட்சிணாமூர்த்தி, நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் பழனி, கோட்டப்பொறி யாளர் ராஜ்குமார், உதவி கோட்ட ப்பொறியாளர் ரகுராமன், அண்ணா மலையார் கோவில் இணை ஆணையர் சி.ஜோதி, கோட்டாட்சியர் மந்தாகினி, ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி, வட்டாட்சியர் தியாகராஜன், மின்வாரிய உதவி செயற்பொறியாளர் வெங்கடேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் அமிர்தராஜ், நகர மன்ற துணைத் தலைவர் சு.ராஜாங்கம், டாக்டர் சேஷாத்ரி, மெய்யூர் சந்திரன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×