என் மலர்
உள்ளூர் செய்திகள்

தொழிலாளிக்கு கத்தி வெட்டு
- முன் விரோத தகராறில் விபரீதம்
- போலீசார் விசாரணை
வெம்பாக்கம்:
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் அடுத்த கீழ்நெல்லி கிராமத்தை சேர்ந்தவர் முரளி (வயது 31). தொழிலாளி. இவரது மனைவி கவுசல்யா (26). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளனர்.
அதே கிராமத்தை சேர்ந்த கல்யாண சுந்தரத்துக்கும், முரளிக்கும் முன் விரோத தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முரளி சித்தாத்தூருக்கு சென்றார். அங்குள்ள ஒரு கோழிப்பண்ணை அருகே நின்றிருந்தார்.
அங்கு வந்த கல்யாண சுந்தரம், முரளிடம் முன் விரோத தகராறு காரணமாக வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.
இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். ஆத்திரமடைந்த கல்யாண சுந்தரம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் திடீரென முரளியை வெட்டினார்.
காயம் அடைந்த முரளியை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தூசி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து கல்யாண சுந்தரத்தை தேடி வருகின்றனர்.






