என் மலர்
உள்ளூர் செய்திகள்

நெரிசலில் சிக்கி தவிக்கும் வாகனங்களை படத்தில் காணலாம்.
புதிய பஸ் நிலையத்தின் வெளியே நிற்கும் பஸ்களால் நெரிசல்
- பள்ளி, கல்லூரி வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றன
- நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
செங்கம்:
செங்கம் புதிய பஸ் நிலையத்தில் தினமும் நூற்றுக்கணக்கான பஸ்கள் பல்வேறு வழித்தடத்தில் செல்கின்றது. இந்நிலையில் தனியார் உட்பட அரசு பஸ்கள் காலை மற்றும் இரவு நேரங்களில் பஸ் நிலையத்தின் உள்ளே வராமல் வெளியிலேயே நின்று செல்கின்றனர்.
குறிப்பாக காலை நேரத்தில் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலையின் அருகே தனியார் பஸ்கள் வரிசையாக நிற்பதால் பின்னால் வரும் வாகனங்களுக்கு வழி இல்லாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனால் பள்ளி, கல்லூரி வாகனங்கள், என பல்வேறு வாகனங்கள் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டு நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நிற்கின்றன.
பஸ் நிலையத்தின் வெளியே பயணிகளை ஏற்றி செல்வதால் பயணிகள் பஸ் நிலையத்தில் வெளியே காத்திருக்கும் சூழல் உருவாகின்றது. இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி உள்ளனர்.






