search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
    X

    அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

    • 2 மணிநேரம் காத்திருந்து தரிசனம்
    • அதிகாலை முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி

    வேங்கிகால்:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    பவுர்ணமி உள்ளிட்ட விழா நாட்களில் மட்டுமே பக்தர்கள் வருகை அதிகமாக இருந்த நிலை மாறி, அனைத்து நாட்களிலும் பக்தர்கள் அதிகளவில் வந்த வண்ணம் இருக்கின்றனர்.

    குறிப்பாக, அரசு அரசு விடுமுறை நாட்கள், வார இறுதி நாட்களில் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். இந்நிலையில், ஞாயிறு விடுமுறை தினமான இன்று அதிகாலையில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    சுற்றுவட்டார மாவட்டங்கள் மட்டுமின்றி, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் அதிகளவில் குவிந்தனர்.

    கோவில் வெளி பிரகாரம் முதல் பொது தரிசன வரிசை, முலவர் சன்னதி வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றனா. சுமார் 2 மணி நேரம் வரை வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    அதேபோல், அம்மணி அம்மன் கோபுரம் வழியாக அனுமதிக்கப்பட்ட கட்டண தரிசன வரிசையிலும் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் வருகை அதிகரித்ததால், சிறப்பு தரிசனம், அமர்வு தரிசனம் ரத்துச் செய்யப்பட்டது.

    மேலும், பக்தர்களின் வருகை அதிகரித்திருப்பதால், அதிகாலை முதல் தொடர்ச்சியாக பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

    Next Story
    ×