search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உணவு, குடிநீர் வசதிகளுடன் 48 முகாம்கள் தயார்
    X

    உணவு, குடிநீர் வசதிகளுடன் 48 முகாம்கள் தயார்

    • மின்கம்பங்களில் கால்நடைகளை கட்டி வைப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்
    • மரங்களுக்கு கீழே நிற்பதை தவிர்க்க அறிவுரை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், அதனை எதிர்கொள்ள ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

    இதுவரை செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் வளர்மதி கூறியதாவது:-

    மாவட்டத்தில் குறிப்பாக தாழ்வான பகுதியில் வசிக்கும் பொதுமக்களை தங்க வைக்க உணவு, குடிநீர், கழிவறை ஆகிய வசதிகளுடன் 48 முகாம்கள் தயார் நிலையில் உள்ளது.

    மேலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதால் தேவையில்லாமல் பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும், மின்கம்பங்களை கைகளால் தொடுவதோ, கால்நடைகளை கட்டி வைப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.

    இடி, மின்னல் ஏற்படும் நேரங்களில், மரங்களுக்கு கீழே நிற்பதை தவிர்க்க வேண்டும். ராணிப்பேட்டை மாவட்டத்தில் மழை பாதிப்பு குறித்து பொதுமக்கள் 8300929401 என்ற வாட்ஸ் அப் எண் வாயிலாக தெரிவிக்கலாம்.

    இவ்வாறு கலெக்டர் கூறினார்.

    மேலும் மழை பாதிப்புகள் குறித்து புகார்கள் தெரிவிக்க தாலுகா வாரியாக தொடர்பு எண்களையும் கலெக்டர் வெளியிட்டார்.

    Next Story
    ×