search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    191 பயனாளிகளுக்கு ரூ.1.80 கோடி நலத்திட்ட உதவி
    X

    191 பயனாளிகளுக்கு ரூ.1.80 கோடி நலத்திட்ட உதவி

    • கலெக்டர் முருகேஷ் வழங்கினார்
    • திருவண்ணாமலையில் சுதந்திர தின விழா கோலாகலம்

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை காவல் துறை ஆயுதப்படை மைதானத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் கலெக்டர் பா.முருகேஷ் தேசிய கொடியை ஏற்றிவைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

    வீட்டுமனை பட்டா, நரிக்குறவர் சான்றிதழ், இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை, திருமணம் மற்றும் முதியோர் உதவித்தொகை, மகளிர் கடன், விவசாயிகளுக்கு இடுபொருட்கள், தையல் இயந்திரம், சலவைப்பெட்டி, சிறு தொழில் கடன் என 191 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 80 லட்சத்து 32 ஆயிரத்து 846 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

    இதில் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், கூடுதல் ஆட்சியர் ரிஷப், மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் பிரியதர்ஷினி, கோட்டாட்சியர் மந்தாகினி, வட்டாட்சியர் சரளா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    அண்ணாமலையார் கோவில் மாடவீதியில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்த கலெக்டர் அண்ணாமலையார் கோவிலில் நடந்த சமபந்தி விருந்தில் கலந்து கொண்டார். தொடர்ந்து தலையாம்பள்ளம் கிராம ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டார்.

    சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கட்டிடம் மற்றும் அதன் அருகில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை நீர் ஊற்று ஆகியவை மூவர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 860 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடந்தது.

    Next Story
    ×