என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திம்மராய சாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
    X

    திம்மராய சாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

    • கோவில் வளாகத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக திம்மராய பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் திருமண கோலத்தில் எழுந்தருளினார்.
    • பல்வேறு வைபவ நிகழ்ச்சிகளுக்குப் பிறகு, அர்ச்சகர் விஷ்ணு ஸ்ரீதேவி, பூதேவிக்கு திருமாங்கல் யத்தை அணிவித்தார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த படப்பள்ளியில் உள்ள, திம்மராய சாமி கோவிலில், திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக திம்மராய பெருமாள் கோவில் உள்ளது.

    ராம நவமியன்று பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம மற்றும் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதனைய டுத்து, கோவில் வளாகத்தில் அம்மன் அழைப்பு, திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி நடந்தது. கோவில் வளாகத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக திம்மராய பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் திருமண கோலத்தில் எழுந்தருளினார்.

    பல்வேறு வைபவ நிகழ்ச்சிகளுக்குப் பிறகு, அர்ச்சகர் விஷ்ணு ஸ்ரீதேவி, பூதேவிக்கு திருமாங்கல் யத்தை அணிவித்தார்.பின்பு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. அதைத்தொடர்ந்து கருட வாகனத்தில், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக திம்மராய பெருமாள் எழுந்தருளினார். இவ்விழாவில் படப்பள்ளி பட்டக்கானூர் பெருமாள் குப்பம் சுற்று வட்டார பொதுமக்கள் பங்கேற்றனர்.

    Next Story
    ×