search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருடிவிட்டு கண்காணிப்பு கேமராவையும் தூக்கி சென்ற திருடர்கள்
    X

    திருடிவிட்டு கண்காணிப்பு கேமராவையும் தூக்கி சென்ற திருடர்கள்

    • தங்க நகைகள் மற்றும் 25 கிலோ வெள்ளிப்பொருட்களை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
    • கண்காணிப்பு கேமராவையும் கொள்ளையர்கள் எடுத்து சென்றது தெரியவந்தது.

    மத்தூர்,

    திருப்பத்தூரை சேர்ந்தவர் சேகர் (வயது 52). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள அனுமன்தீர்த்தம் மெயின் ரோட்டில் நகை மற்றும் அடகு கடை நடத்தி வருகிறார்.

    நேற்று முன்தினம் இரவு விற்பனை முடிந்த பின்னர் அவர் கடையை பூட்டி விட்டு திருப்பத்தூருக்கு சென்று விட்டார். இந்த நிலையில் நேற்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் சிலர் கடையின் சுவரில் துளை போட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் சேகருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர் விரைந்து வந்து கடையை திறந்து பார்த்தார். நகை, வெள்ளி கொள்ளை அப்போது கடையின் பின்புறமாக துளையிடப்பட்டு மர்மநபர்கள் உள்ளே புகுந்து அங்கிருந்த 20 பவுன் தங்க நகைகள் மற்றும் 25 கிலோ வெள்ளிப்பொருட்களை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து சேகர் ஊத்தங்கரை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் நகைக்கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவையும் கொள்ளையர்கள் எடுத்து சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து போலீஸ் மோப்ப நாய் ரேஷ்மி சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த இடத்தில் இருந்து மோப்பம் பிடித்தவாறு ஆஞ்சநேயர் கோவில் வரை ஓடி விட்டு மீண்டும் திரும்பி வந்தது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் கடை மற்றும் சுவரில் இருந்த தடயங்களை பதிவு செய்தனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    Next Story
    ×