என் மலர்
உள்ளூர் செய்திகள்

மூதாட்டியிடம் நகை பறித்த கொள்ளையன்.
திண்டிவனம் அருகே மூதாட்டியிடம் நகை பறித்த கொள்ளையன்
- புதுச்சேரி-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை ஓரம் டீக்கடை நடத்தி வருபவர் ராணி
- சி.சி.டி.வி. காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த மொளசூர் பகுதியில் புதுச்சேரி-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை ஓரம் டீக்கடை நடத்தி வருபவர் ராணி (வயது 60), இவர் டீக்கடைக்கு மர்ம நபர் ஒருவர் வந்து டீ வாங்குவது போல வந்துள்ளார். பின்னர் திடீரென அந்த மூதாட்டி அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி ஓடிவிட்டார். இந்த சி.சி.டி. காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இது குறித்து கிளியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சி.சி.டி. காட்சிகளைக் கொண்டு மர்ம நபரை தேடி வருகின்றனர்.
Next Story