search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சின்னமனூரில் சாலையில் தேங்கும் கழிவுநீரால் தொற்றுநோய் அபாயம்
    X

    சாலையில் தேங்கியுள்ள கழிவுநீர்.

    சின்னமனூரில் சாலையில் தேங்கும் கழிவுநீரால் தொற்றுநோய் அபாயம்

    • தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.
    • ஏற்கனவே டெங்கு காய்ச்சல் பரவி வருவதால் பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    சின்னமனூர்:

    சின்னமனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் அறநிலையத்துறை அலுவலகம் முன்பு மழைநீரோடு கழிவுநீரும் கலந்து சாலையில் தேங்கி நிற்கிறது.

    இதன் அருகே போலீஸ் நிலையம், ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு வரும் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் ஆகியோருக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. ஏற்கனவே டெங்கு காய்ச்சல் பரவி வருவதால் பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர். அலுவலகத்திற்கு வரும் அறநிலையத்துறை அதிகாரி களும் இதனை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை.

    எனவே கழிவுநீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×