search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலத்தில் நடந்த மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகள் கால்பந்து போட்டியில் தேனி அணி முதலிடம்
    X

    கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு மாநகர போலீஸ் உதவி கமிஷனர் லட்சுமி பிரியா வாழ்த்து தெரிவித்தார். அருகில் தலைவர் உமாராணி உள்ளார்.

    சேலத்தில் நடந்த மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகள் கால்பந்து போட்டியில் தேனி அணி முதலிடம்

    • மாற்றுத் திறனாளி களுக்கான மாநில அளவிலான கால்பந்து போட்டி, சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் நடந்தது.
    • இதில், 1-0 என்ற கோல் கணக்கில், தேனி அணி வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச்சென்றது. 2-ம் இடம் பிடித்த சேலம் அணிக்கு வெள்ளி பதக்கமும், 3-ம் இடம் பிடித்த தஞ்சாவூர் அணிக்கு வெண்கல பதக்கமும் வழங்கப்பட்டது.

    சேலம்:

    உலக மாற்றுத்திற னாளிகள் தினத்தை முன்னிட்டு, செரிபரல் பால்சி ஸ்போர்ட்ஸ் அசோ

    சியேஷன் ஆப் தமிழ்நாடு சார்பில், மாற்றுத் திறனாளி களுக்கான மாநில அளவிலான கால்பந்து போட்டி, சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு சேர்மன் உமாராணி தலைமை வகித்தார். தலைவர் பரணிதரன், செயலாளர் சித்தேஸ்வரன், பொருளாளர் காருண்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில், சேலம், தர்மபுரி, சென்னை, தேனி, திண்டுக்கல், தஞ்சாவூர், மதுரை உள்பட 15 மாவட்டங்களைச் சேர்ந்த அணிகள் கலந்து கொண்டு விளையாடின. அணிக்கு 7 பேர் அடிப்படையில் லீக் சுற்று போட்டிகளாக நடத்தப்பட்டது. இறுதிப் போட்டியில் சேலம்-தேனி அணிகள் மோதின.

    இதில், 1-0 என்ற கோல் கணக்கில், தேனி அணி வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச்சென்றது. 2-ம் இடம் பிடித்த சேலம் அணிக்கு வெள்ளி பதக்கமும், 3-ம் இடம் பிடித்த தஞ்சாவூர் அணிக்கு வெண்கல பதக்கமும் வழங்கப்பட்டது.

    வெற்றி பெற்ற வீரர்களுக்கு அஸ்தம்பட்டி போலீஸ் உதவி கமிஷனர் லட்சுமிப்பிரியா, பதக்கங்கள் மற்றும் கோப்பைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

    Next Story
    ×