search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழாக்காலங்களில் கூடுதல் ரெயில்கள் ரெயில்வே பொது மேலாளருக்கு தேனி பயணிகள் சங்கம் கோரிக்கை
    X

    கோப்பு படம்.

    விழாக்காலங்களில் கூடுதல் ரெயில்கள் ரெயில்வே பொது மேலாளருக்கு தேனி பயணிகள் சங்கம் கோரிக்கை

    • போடியில் இருந்து காலை 7 மணிக்கு கிளம்பி 9 மணிக்கு மதுரை செல்லும் வகையிலும், மதுரையில் இருந்து மாலை 7 மணிக்கு கிளம்பி இரவு 9 மணிக்கு போடி வரும் வகையில் ஒரு ரெயில் சேவை உருவாக்கப்பட்டால் இம்மாவட்ட மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
    • ஆயுதபூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து வர உள்ள நிலையில் விழாக்கால சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும்

    தேனி:

    தென்னக ரெயில்வே பொது மேலாளருக்கு தேனி மாவட்ட ரெயில் பயணிகள் சங்க தலைவர் சங்கரநாராயணன் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    சென்னை, மதுரை ரெயிலை போடி வரை நீடித்ததற்கு மாவட்ட மக்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். வாரத்தில் 3 நாட்கள் போடியில் இருந்தும், 3 நாட்கள் சென்னையில் இருந்தும் இயக்கப்படும் ரெயிலை 7 நாட்களும் சென்னையில் இருந்தும் போடியில் இருந்தும் புறப்பட்டு செல்லும் வகையில் மாற்றம் செய்தால் தேனி மாவட்ட மக்கள் மற்றும் கேரள மக்கள் அதிகம் பயனடைவார்கள்.

    போடியில் இருந்து மதுரை செல்லும் ரெயில் மாலை 6 மணிக்கு கிளம்பி 8 மணிக்கு மதுரை செல்கிகிறது. இதனை மாலை 5.30 மணிக்கு கிளம்பி 7.30 மணிக்கு மதுரை செல்லும் வகையில் இயக்கினால் அங்கிருந்து சென்னை, பெங்களூர், மைசூர் போன்ற ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்கு உதவியாக இருக்கும்.

    போடியில் இருந்து காலை 7 மணிக்கு கிளம்பி 9 மணிக்கு மதுரை செல்லும் வகையிலும், மதுரையில் இருந்து மாலை 7 மணிக்கு கிளம்பி இரவு 9 மணிக்கு போடி வரும் வகையில் ஒரு ரெயில் சேவை உருவாக்கப்பட்டால் இம்மாவட்ட மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

    போடி, தேனி, ஆண்டிபட்டி, உசிலம்பட்டி ஆகிய ரெயில் நிலையங்களில் ரிசர்வேஷன் மற்றும் அன்ரிசர்வ்டு பெட்டிகள் எந்த எண் உள்ள பெட்டிகள் எந்த இடத்தில் நிற்கும் என்பதற்கான டிஸ்பிளே போர்டு அமைக்கப்படாமல் உள்ளது. இதனை விரைந்து அமைக்க வேண்டும். ஆயுதபூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து வர உள்ள நிலையில் விழாக்கால சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×