search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி-திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று கிராம உதவியாளர் பணிக்கு எழுத்து தேர்வு
    X

    கோப்பு படம்

    தேனி-திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று கிராம உதவியாளர் பணிக்கு எழுத்து தேர்வு

    • மாவட்டத்தில் 7 மையங்களில் காலை 10 மணிக்கு தொடங்கி 11 மணிவரை நடைபெற்றது.
    • அரைமணிநேரம் தமிழ்மொழிக்கான எழுத்து திறனறிவுத்தேர்வும், அடுத்த அரைமணிநேரம் ஆங்கில மொழிக்கான எழுத்து திறனறிவுத்தேர்வும் நடைபெற்றது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 வட்டாரங்களில் கிராம உதவியாளர்கள் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதில் தகுதியுடைய நபர்களுக்கு எழுத்து திறனறிவுத்தேர்வு இன்று நடைபெற்றது.

    மாவட்டத்தில் 7 மையங்களில் காலை 10 மணிக்கு தொடங்கி 11 மணிவரை நடைபெற்றது. தேர்வில் அரைமணிநேரம் தமிழ்மொழிக்கான எழுத்து திறனறிவுத்தேர்வும், அடுத்த அரைமணிநேரம் ஆங்கில மொழிக்கான எழுத்து திறனறிவுத்தேர்வும் நடைபெற்றது.

    இணையவழி மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு அனுமதி சீட்டினை பதிவிறக்கம் செய்வதற்கு விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது. இதனை பதிவிறக்கம் செய்து கொண்டு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காத்திருப்போர் பட்டியலில் இடம்பெற்றிருப்பவர்களில் முதுநிலைப்படி பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நபர்களுக்கும், அனுமதி சீட்டு அனுப்பப்பட்டுள்ளது.

    தேர்வு மையத்தில் கருப்பு பால்பாய்ண்ட் பேனா மட்டும் ஹால்டிக்கெட்டுடன் அனுமதிக்கப்பட்டது. அலைபேசி, புத்தகங்கள், மின்னணு சாதனங்கள் உள்பட எந்த பொருட்களும் தேர்வு மையத்தில் அனுமதிக்கப்படவில்லை. மேலும் தேர்வாளர்கள் பலத்த சோதனைக்கு பின்னரே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

    தேனி மாவட்டத்தில் நடைபெற்ற கிராம உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வில் ஏராளமான இளைஞர்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கும் விதிமுறைகள் எடுத்துரைக்கப்பட்டு சோதனைக்கு பின்னர் தேர்வு மையங்களில் அனுமதிக்கப்பட்டனர்.

    Next Story
    ×