என் மலர்
உள்ளூர் செய்திகள்

மூணாறு-போடிமெட்டு இடையே 42 கி.மீ சாலை பணிகள் நிறைவு பெற்று திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் உள்ளது.
6 ஆண்டுகளாக நடைபெற்ற போடிமெட்டு-மூணாறு இருவழிச்சாலை பணிகள் நிறைவு
- மூணாறு-போடி மெட்டு ரோட்டில் மூணாறு அருகே லாக்காடு எஸ்டேட் பகுதியில் டோல்கேட் அமைக்க ப்பட்டுள்ளது.
- சாலை திறக்கப்பட்டதும் டோல்கேட் பயன்பாட்டிற்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலசொக்கநாதபுரம்:
கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு-போடிமெட்டு இடையே 42 கி.மீ சாலை இருவழிச்சாலையாக மாற்ற ரூ.381.76 கோடி செலவில் அகலப்படுத்தும் பணி கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கியது. மத்திய சாலை போக்குவரத்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின்கட்கரி பணிகளை தொடங்கி வைத்தார்.
2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பணிகள் முடிக்க ப்பட்டு சாலை பயன்பாட்டி ற்கு வரவேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த வழித்தடத்தில் மூணாறு அருகே கேப் ரோட்டில் மணிசரிவு, மழை, வனத்துறை இடையூறு உள்ளிட்ட காரணங்களால் பணிகள் முடிப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. தற்போது அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு அதிகாரப்பூர்வமான திறப்புவிழாவிற்கு சாலை தயாராக உள்ளது.
இதனை மத்திய மந்திரி நிதின்கட்கரி வருகிற 17-ந்தேதி தொடங்கி வைக்கி றார். இதுதவிர தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் சார்பில் ரூ.910 கோடி செலவில் கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு-கொச்சி இடையே 124 கி.மீ தூரம் சாலை சீரமைக்கப்படுகிறது.
இந்த பணிகளையும் மத்திய மந்திரி தொடங்கி வைக்கிறார். 6 ஆண்டுகளுக்கு பிறகு இந்த சாலை மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து ள்ளனர். மூணாறு-போடி மெட்டு ரோட்டில் மூணாறு அருகே லாக்காடு எஸ்டேட் பகுதியில் டோல்கேட் அமைக்க ப்பட்டுள்ளது. இது இடுக்க மாவட்டத்தின் முதல் டோல்கேட் ஆகும். சாலை திறக்கப்பட்டதும் டோல்கேட் பயன்பாட்டிற்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






