என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரியாறு, வைகை அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து சரிவு
    X

    கோப்பு படம்.

    பெரியாறு, வைகை அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து சரிவு

    • கம்பம் பள்ளத்தாக்கு பகுதி பாசனத்துக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர் மட்டம் குறைந்து கொண்டே வருகிறது.
    • பெரியாறு அணையின் நீர் மட்டம் இன்று காலை நிலவரப்படி 119.70 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    கேரளாவில் தாமதமாக தொடங்கிய தென் மேற்கு பருவமழை ஒரு சில நாட்கள் மட்டுமே பெய்து நின்று விட்டது. இதனால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர் வரத்து எதிர்பார்த்த அளவு வரவில்லை.

    115 அடியில் இருந்து பெரியாறு அணையின் நீர் மட்டம் 120 அடிக்கு உயர்ந்த நிலையில் அதன் பிறகு மழை குறைந்ததால் நீர் வரத்து நின்றது. இருந்தபோதும் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி பாசனத்துக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர் மட்டம் குறைந்து கொண்டே வருகிறது.

    பெரியாறு அணையின் நீர் மட்டம் இன்று காலை நிலவரப்படி 119.70 அடியாக உள்ளது. நேற்று 197 கன அடி வந்த நிலையில் இன்று காலை 97 கன அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து 400 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 2574 மி.கன அடியாக உள்ளது.

    71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர் மட்டம் 49.89 அடியாக உள்ளது. வரத்து இல்லை. மதுரை மாவட்ட குடிநீருக்காக 69 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 1977 மி.கன அடியாக உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 47.95 அடியாகவும், சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 70.52 அடியாகவும் உள்ளது.

    Next Story
    ×