என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காவிரியில் வரும் நீரை தருமபுரி மாவட்ட  மக்கள் பெற வழிவகுக்க வேண்டும்  -தருமபுரியில் கே.பாலகிருஷ்ணன் பேட்டி
    X

    தருமபுரியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில குழு கூட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் பேசியபோது எடுத்த படம்.

    காவிரியில் வரும் நீரை தருமபுரி மாவட்ட மக்கள் பெற வழிவகுக்க வேண்டும் -தருமபுரியில் கே.பாலகிருஷ்ணன் பேட்டி

    • தருமபுரியில் கம்யூனிஸ்ட் தலைவர் பாலகிருஷ்ணன் பேட்டியளித்தார்.
    • காவிரி உபரி நீரை தருமபுரிக்கு திருப்ப வேண்டுகோள் விடுத்தார்.

    தருமபுரி,

    தருமபுரியில் இன்று நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில குழு கூட்டத்திற்கு வருகை புரிந்த அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தி யாளர்களை சந்தித்தார்.

    அப்போது காவிரியில் வரும் நீரை தருமபுரி மாவட்ட மக்கள் பயன்பெரும் வகையில் ஒரு நீரேற்று நிலையம் அமைத்து ஆய்வு செய்து அனைவருக்கும் தண்ணீர் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அடிதட்டு மக்களின் வயிற்றில் அடிப்பது போல அரிசிக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரியை ஒன்றிய அரசு விதித்துள்ளனர். இது நடைமுறையில் 10 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை இருக்கும். மோடியின் மக்கள் மீதான தாக்குதல்கள் பல கட்டமாக இருந்து வருகிறது. இதுவரை ஏராளமான தாக்குதலில் ஈடுபட்டு வந்த ஒன்றிய அரசாங்கத்தின் செயல்பாடு, தற்போது அடிமடியிலேயே கை வைத்துள்ளது.

    இதனைக் கண்டித்து உணவுப் பொருள்கள் மீது போடப்பட்டுள்ள வரியை திரும்ப பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வருகின்ற 29-ந் தேதி மத்திய அரசு அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த உள்ளதாக கூறிய அவர், 75-வது சுதந்திர தினம் கொண்டாட உள்ள நேரத்தில் இந்தியாவில் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்கள், இந்துக்கள், முஸ்லிம், சீக்கியர் என வேறுபாடு இல்லாமல் எல்லாரும் இணைந்து போராடி சுதந்திரத்தை பெற்றனர்.

    இந்த விடுதலைக்காக பாடுபடாதவர்கள் என்று பார்த்தால், ஆர்எஸ்எஸ், பா.ஜ.க. மட்டும் தான். எனவே விடுதலையின் பாரம்பரியத்தை கட்டி காக்க அனைவரையும் ஒன்றிணைத்து சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டும்.

    அரசு நிகழ்ச்சியில் பூஜைகள் நடப்பது குறித்து, தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் சொல்லிய கருத்து சரியானது தான். ஒரு அரசு என்பது அனைத்து மக்களுக்குமான அரசு, மதசார்பற்ற அரசு, ஒரு குறிப்பிட்ட மதத்திற்கான விழா எடுப்பது ஏற்புடையதல்ல என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் குமார், அரசியல் தலைமை குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் நூர்முகமது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×