search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திசையன்விளையில் நடைபெற்ற அகில இந்திய கபடி போட்டியில்  தமிழ் தலைவாஸ் அணி சாம்பியன் - சபாநாயகர் அப்பாவு பரிசு வழங்கினார்
    X

    திசையன்விளையில் நடந்த அகில இந்திய கபடி போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ் தலைவாஸ் அணிக்கு சபாநாயகர் அப்பாவு பரிசு கோப்பை வழங்கியபோது எடுத்தபடம். அருகில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் மற்றும் பலர் உள்ளனர்.

    திசையன்விளையில் நடைபெற்ற அகில இந்திய கபடி போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி சாம்பியன் - சபாநாயகர் அப்பாவு பரிசு வழங்கினார்

    • கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திசையன்விளையில் அகில இந்திய அளவிலான மின்னொளி கபடி போட்டி 4 நாட்கள் நடைபெற்றது.
    • பெண்கள் பிரிவில் முதல் பரிசு தொகையை ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய கூட்டமைப்பு தலைவர் அனிதா பிரின்ஸ் வழங்கினார்.

    திசையன்விளை:

    கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திசையன்விளையில் அகில இந்திய அளவிலான மின்னொளி கபடி போட்டி 4 நாட்கள் நடைபெற்றது.

    முதல்பரிசு

    நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த போட்டியில் பெண்கள் இறுதி ஆட்டத்தில் வடக்கு ெரயில்வே மற்றும் சென்ட்ரல் ெரயில்வே அணிகள் மோதின.

    இதில் 39-26 என்ற புள்ளிக்கணக்கில் வடக்கு ெரயில்வே அணி வெற்றி பெற்று முதல் பரிசு ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் மற்றும் வெற்றி கோப்பையை தட்டி சென்றது. 2-வது இடம் பிடித்த சென்ட்ரல் ரெயில்வே அணி ரூ. 1 லட்சம் மற்றும் கோப்பையும், 3-வது இடம் பிடித்த சவுத் சென்ட்ரல் அணிக்கும், 4-வது இடம் பிடித்த கிழக்கு ரெயில்வே அணிக்கும் தலா ரூ. 75 ஆயிரம் ரொக்கப்பரிசு மற்றும் கோப்பையும் கிடைத்தது.

    சபாநாயகர் அப்பாவு

    ஆண்கள் பிரிவு இறுதிப்போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியும், கிரீன் ஆர்மி அணியும் மோதின. இதில் தமிழ் தலைவாஸ் அணி 41:30 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று முதல் பரிசு ரூ.2 லட்சம் மற்றும் கோப்பையை தட்டி சென்றது. 2-வது இடம் பிடித்த கிரீன் ஆர்மி அணிக்கு ரூ.1½ லட்சம் மற்றும் கோப்பையும் 3-வது இடம் பிடித்த சென்னை வருமானவரித்துறை அணிக்கும், 4-வது இடம் பிடித்த பெங்களூர் பரோடா வங்கி அணிக்கும் தலா ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசு மற்றும் கோப்பையும் கிடைத்தது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு தொகை மற்றும் வெற்றி கோப்பைகளை சபாநாயகர் அப்பாவு வழங்கினார்.

    வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசு கோப்பைகளை வி.எஸ்.ஆர். சுபாஷ் மற்றும் வி.எஸ்.ஆர்.சுரேஷ் ஆகியோர் வழங்கினார். ஆண்கள் பிரிவில் முதல் பரிசை நாங்குநேரி யூனியன் தலைவர் சவுமியா ஆரோக்கிய எட்வின், 2-வது பரிசை ராதாபுரம் யூனியன் துணைத் தலைவர் இளையபெருமாள், 3-வது பரிசை மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் நம்பி, 4-வது பரிசை அப்புவிளை பஞ்சாயத்து தலைவர் சாந்தாமகேஸ்வரன் மற்றும் மயோபதி குழும தலைவர் டாக்டர் ராமசாமி ஆகியோர் வழங்கினர்.

    பரிசளிப்பு

    பெண்கள் பிரிவில் முதல் பரிசு தொகையை ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய கூட்டமைப்பு தலைவர் அனிதா பிரின்ஸ் வழங்கினார். 2-ம் பரிசு தொகையை ராதாபுரம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் எஸ்தாக் டென்னிசன், 3-வது பரிசு தொகையை உறுமங்குளம் பொன் இசக்கி பாண்டியன், நவலடி சரவணகுமார், கஸ்தூரிரங்கபுரம் பாலன் ஆகியோரும், 4-வது பரிசு தொகையை ராதாபுரம் கூட்டுறவு சங்க தலைவர் அரவிந்தன், சிதம்பராபுரம் பேபி முருகன், உதயத்தூர் பஞ்சாயத்து தலைவர் கந்தசாமி மணிகண்டன் ஆகியோர் வழங்கினர்.

    பரிசளிப்பு விழாவில் பாளையங்கோட்டை யூனியன் தலைவர் தங்கபாண்டியன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பரமசிவ அய்யப்பன், கனகராஜ், ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த், களக்காடு ஒன்றிய செயலாளர் பி.சி.ராஜன், நாங்குநேரி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆரோக்கிய எட்வின், கல்லிடைக்குறிச்சி நகர செயலாளர் இசக்கி பாண்டியன், மாவட்ட அறங்காவல் குழு உறுப்பினர் முரளி மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×