என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல் உழவர் சந்தையில் வரத்து குறைவால் கத்திரிக்காய் விலை கிடுகிடுவென உயர்வு
    X

    சந்தையில் காய்கறிகளை வாங்கும் பொதுமக்கள்.

    திண்டுக்கல் உழவர் சந்தையில் வரத்து குறைவால் கத்திரிக்காய் விலை கிடுகிடுவென உயர்வு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக பிஞ்சு உதிர்ந்ததால் கத்திரிக்காய் வரத்து குறைந்துள்ளது.
    • கத்திரிக்காயின் விலை ரூ.100க்கு விற்பனை செய்யப்பட்டதால் பொதுமக்கள் மற்றும் விஷேச வீட்டார்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே என்.ஜி.ஓ. காலனியில் உழவர்சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு நகரை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தங்களது அன்றாட சமையலுக்கு தேவைப்படும் காய்கறிகளை வாங்க குவிந்தவண்ணம் உள்ளனர்.

    இந்த உழவர்சந்தையில் மொத்தம் 70 கடைகள் செயல்பட்டு வருகிறது. முள்ளிப்பாடி, தாமரைப்பாடி, வடமதுரை மற்றும் பல பகுதிகளில் இருந்து விவசாயிகள் தாங்கள் விலைவித்த தக்காளி, வெண்டை, முரு ங்கைக்காய், வெங்காயம், பூசணி போன்ற காய்கறி களை விற்பனைக்கு இங்கு கொண்டு வருகின்றனர்.

    70 கடைகளிலும் உள்ளூர் மற்றும் வெளியூரிலிருந்து இறக்குமதி செய்யப்படும் காய்கறிகளை விற்பனை செய்யப்படுகின்றது. இந்நிலையில் தற்போது கத்திரிக்காய் விலை கிடுகி டுவென உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக பிஞ்சு உதிர்ந்ததால் கத்திரிக்காய் வரத்து குறைந்துள்ளது. எப்போதும் நாள் ஒன்றுக்கு 2 டன் கத்திரிக்காய் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனையாகும். ஆனால் இன்று 150 கிலோ மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டது.

    இதனால் நேற்றுவரை கிலோ ரூ.40 மற்றும் ரூ.50க்கு விற்ற கத்திரிக்காயின் விலை இன்று கிடுகிடுவென கிலோ ரூ.100க்கு விற்பனையானது. பெரிய கத்திரிக்காய் கிலோ ரூ.100, சின்ன கத்திரிக்காய் கிலோ ரூ.90, நீல கத்திரிக்காய் கிலோ ரூ.60 என விற்பனை செய்யப்பட்டது. நாளை முகூர்த்தநாள் என்பதால் அன்றாடம் தேவைப்படும் கத்திரிக்காயின் விலை ரூ.100க்கு விற்பனை செய்யப்பட்டதால் பொதுமக்கள் மற்றும் விஷேச வீட்டார்கள் அதிர்ச்சியடைந்தனர். தேவை அதிகமாக இருந்தாலும், விலை உயர்வின் காரணமாக சிலர் கத்திரிக்காயின் கொள்ளளவை குறைத்து மற்ற காய்கறிகளை வாங்கிச்சென்றனர்.

    1 கிலோ தக்காளி ரூ.20, வெண்டைக்காய் ரூ.20, அவரைக்காய் ரூ.90, முருங்கைக்காய் ரூ.40, பச்சைமிளகாய் ரூ.45, சின்ன வெங்காயம் ரூ.50, இஞ்சி ரூ.230, உருளைக்கிழங்கு ரூ.40, கேரட் ரூ.70 என விற்பனையானது.

    Next Story
    ×