search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீச்சல் போட்டியில் சாதிக்க துடிக்கும் மாற்றுத்திறனாளியின் வறுமை
    X

    மகேஷ்

    நீச்சல் போட்டியில் சாதிக்க துடிக்கும் மாற்றுத்திறனாளியின் வறுமை

    • பாட்டி சிறுவயதில் இருந்து இவரை காய்கறி வியாபாரம் செய்து வளர்த்து வந்தார்.
    • பெரிய அளவிலான நீச்சல் அகாடமியில் பயிற்சி பெற வேண்டும். அரசும் சமூக ஆர்வலர்களும் தமக்கு உதவ வேண்டுமென கோரிக்கை வைத்து வருகிறார்.

    வேப்பனபள்ளி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அடுத்த கோடிப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மகேஷ் (வயது 25). எம்.காம். படித்துள்ளார். இவருக்கு தாய் தந்தை இல்லாத நிலையில் அவருடைய பாட்டி சிறுவயதில் இருந்து இவரை காய்கறி வியாபாரம் செய்து வளர்த்து வந்தார்.

    பிறவியிலேயே இரண்டு கைகளையும் இழந்த மாற்றுத்திறனாளி மகேஷ் நீச்சல் போட்டி என் மீது அதிக ஆர்வம் கொண்டு கிராமத்தில் உள்ள குளங்கள், ஏரிகள், ஆறுகள் கிணறுகளில் நீச்சல் பயிற்சி பெற்று வந்துள்ளார்.

    இந்த நிலையில் நீச்சல் போட்டியில் மாவட்ட அளவில் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்ட மகேஷ் பின்னர் மாநில அளவிலான நீச்சல் போட்டிகளிலும் கலந்து கொண்டு பதக்கங்களை வென்றுள்ளார்.

    தனது நீச்சல் திறமையை அறிந்த மகேஷ் தன்னுடைய திறமையை பாரா ஒலிம்பிக்கில் கலந்துகொண்டு இந்தியாவிற்காக தங்கம் வெல்ல வேண்டும் என்ற லட்சியத்துடன் தற்போது தீவிரமாக நீச்சல் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

    இந்த நிலையில் திடீரென்று கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அவரது பாட்டி இறந்த நிலையில் மகேஷின் பொருளாதாரம் முடங்கியது. ஆனால் மனம் தளராத மகேஷ் தான் மாற்றுத்திறனாளி என்னும் குறையை கண்டுகொள்ளாமல் தான் வாழ்வில் தனது திறமையை வெளிக்கொண்டு வந்து சாதனை புரிய வேண்டும் என நோக்கத்தில் தினமும் காலையில் முழு தன்னம்பிக்கையுடன் கண்விழித்து நாள்தோறும் தீவிரநீச்சல் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

    ஆனால் அவர் பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்க சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் பெரிய அளவிலான நீச்சல் அகாடமியில் பயிற்சி பெற வேண்டும்.

    மேலும் தனக்கு உணவு மற்றும் உரிய பயிற்சி பெற்றால் மட்டுமே ஒலிம்பிக்கில் வெற்றி பெற முழு திறமையும் வெளிகொண்டுவர முடியும் என கூறுகிறார் மகேஷ்.

    ஆனால் தினமும் ஒருவேளை சோற்றுக்காக மற்றவர்களிடம் கையேந்தி நிற்கும் நிலையில் மகேஷ்க்கு மேல் பயிற்சி பெற தனக்கு போதிய பொருளாதார வசதியும் நிதி வசதியும் தற்போது தனக்கு இல்லாத நிலையில் மற்றவர்களிடம் உதவி வேண்டி கையேந்தி காத்திருகிறார். மேலும் தமிழக அரசும் சமூக ஆர்வலர்களும் தமக்கு உதவ வேண்டுமென கோரிக்கை வைத்து வருகிறார்.

    தனது கனவுக்காக வாழ்க்கையில் அனைத்தையும் இழந்து தனது திறமையின் மூலம் தன் தாய்நாட்டிற்காக சாதிக்க துடிக்கும் மாற்றி திறனாளி மகேஷின் கனவு நிறைவேறுமா?.

    Next Story
    ×