search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீட்டுக்குத் தெரியாமல் வெளியேறிய காதல் ஜோடி மீட்பு பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர்
    X

    வீட்டுக்குத் தெரியாமல் வெளியேறிய காதல் ஜோடியை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

    வீட்டுக்குத் தெரியாமல் வெளியேறிய காதல் ஜோடி மீட்பு பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர்

    • இருவரையும் நேற்று காலை காணவில்லை என திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையத்தில் மணிகண்டன் புகார் அளித்தார்.
    • வீட்டுக்கு தெரியாமல் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள இளந்துறை மேட்டுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராமர் மகன் மணிகண்டன்(வயது23) டிப்ளமோ மெக்கானிக் படித்துள்ளார். என்பவரும் இதே ஊரை சேர்ந்த மணிகண்டன் மகள் ரேனுகா(23) பி.எஸ்.சி. படித்துள்ளார். ஆகிய இருவரையும் நேற்று காலை காணவில்லை என திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையத்தில் மணிகண்டன் புகார் அளித்தார். புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் செல்போ னில்தொடர்பு கொண்டு இருவரையும் திருவெண்ணை நல்லூர் போலீஸ் நிலையம் வர வைத்து விசாரணை செய்தனர்.

    மணிகண்டனும் ரேணுகாவும் கடந்த 8 வருடங்களாக வீட்டுக்கு தெரியாமல் காதலித்து வந்ததாகவும் இரு விட்டாரம் திருணத்திற்கு சம்மதம் தெரிவிக்காததால் நாங்கள் வீட்டை விட்டு வெளியேறியதாக தெரிவி த்தனர். இரு வீட்டாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தியதில் மணிகண்டன் ரேணுகா திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததால் திருவெண்ணைநல்லூர் போலீசார் அறிவுரைகளை வழங்கி மணிகண்டன் ரேணுகாவையும் பெற்றோர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர். அதன் பின்னர் மயிலம் முருகன் கோவிலுக்கு சென்று இருவருக்கும் திருமணம் செய்து வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

    Next Story
    ×