search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விமானம் மூலம் சென்று வடமாநில - தொழிலாளியை கைது செய்த போலீசார்
    X

    விமானம் மூலம் சென்று வடமாநில - தொழிலாளியை கைது செய்த போலீசார்

    • தகராறு செய்த உபேந்திரா அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினார்.
    • ஜார்க்கண்ட் செல்வதற்குள் விமானம் மூலம் சென்று மடக்கி பிடித் துள்ளனர்.

    திருப்பூர் :

    ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் உபேந்திரா (வயது 50). இவரது மனைவி சித்ராதேவி (43). இவர்கள் 3 மகன்களுடன் திருப்பூர் நெசவாளர் காலனி திருமலை நகரில் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தனர். உபேந்திரா அப்பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் சரக்கு ஆட்டோ டிரைவராக வேலை செய்து வந்தார். உபேந்திரா வீட்டுக்கு அருகே பீகார் மாநிலம் தாத்தோர் பகுதியைச் சேர்ந்த பவன் (27) என்பவர் தங்கி இருந்து பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை செய்து வந்தார்.

    உபேந்திரா தனது மனைவியின் மீது சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி இரவு, தனது மனைவியுடன் கள்ள தொடர்பு வைத்துள்ளதாக சந்தேகப்பட்டு பவனிடம் தகராறு செய்த உபேந்திரா அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினார். இதில் சிகிச்சை பலனின்றி பவன் இறந்தார்.

    இதுகுறித்து வடக்கு போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து உபேந்திராவை தேடி வந்தனர்.தனிப்படையும் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் விசாரணையில், உபேந்திரா பவனை கொலை செய்து விட்டு திருப்பூரில் இருந்து சென்னைக்கு ரெயிலில் சென்றதும், அங்கிருந்து ஜார்க்கண்ட்டுக்கு ரெயிலில் தப்பி செல்வதும் தெரியவந்தது.

    இதையடுத்து அவரை போலீசார் மடக்கி பிடிக்க முடிவு செய்தனர். இதற்காக தனிப்படையை சேர்ந்த திருப்பூர் வடக்கு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜசேகர், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்முருகன், போலீஸ்காரர் மணிகண்டபிரபு ஆகியோர் கோவையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் சென்றனர். பின்னர் அங்கிருந்து ஜார்க்கண்ட்டுக்கு விமானத்தில் சென்றனர். இதையடுத்து ஜார்க்கண்ட் ரெயில் நிலையத்திற்கு சென்ற தனிப்படையினர், உபேந்திரா வருகைக்காக காத்திருந்தனர். அப்போது உபேந்திரா ரெயிலில் இருந்து இறங்கியதும் மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை விசாரணைக்காக ரெயில் மூலம் திருப்பூருக்கு அழைத்து வருகின்றனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்த உள்ளனர். விசாரணையில் பவன் கொலைக்கான காரணம் குறித்து மேலும் பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

    உபேந்திரா ஜார்க்கண்ட் ரெயில் நிலையத்தில் போலீஸ் பிடியில் சிக்காமல் இருந்திருந்தால் அவர் தொடர்ந்து தலைமறைவாகி இருப்பார். இதனால் போலீசார் அவர் ஜார்க்கண்ட் செல்வதற்குள் விமானம் மூலம் சென்று மடக்கி பிடித்துள்ளனர். கொலையாளியை லாவகமாக மடக்கி பிடித்த தனிப்படை போலீசாரை திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு மற்றும் உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

    Next Story
    ×