search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆடி அமாவாசையை முன்னிட்டு களைகட்டிய அய்யலூர் ஆட்டுச்சந்தை
    X

    அய்யலூர் சந்தையில் கூடிய வியாபாரிகள், விவசாயிகள்.

    ஆடி அமாவாசையை முன்னிட்டு களைகட்டிய அய்யலூர் ஆட்டுச்சந்தை

    • அய்யலூர் ஆட்டுச்சந்தையில் கோவில்களுக்கு நேர்த்திக்கடன் செலுத்த ஆடு, கோழி, சேவல் வாங்க ஆர்வமுடன் குவிந்திருந்தனர்.
    • வாரச்சந்தையில் மின்விளக்கு மற்றும் குடிநீர் வசதி செய்து தரவேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாக உள்ளது.

    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே அய்யலூரில் வியாழக்கிழமை தோறும் நடைபெறும் ஆட்டுச்சந்தையில் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, தேனி மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து வியாபாரிகள் ஆடு, நாட்டுக்கோழி வாங்க குவிந்து வருகின்றனர். இன்று ஆடி அமாவாசை என்பதால் கிராமங்களில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.

    மேலும் கோவில்களுக்கு நேர்த்திக்கடன் செலுத்த ஆடு, கோழி, சேவல் வாங்க ஆர்வமுடன் குவிந்திருந்தனர். தரமான சேவல்கள் ரூ.1500 லிருந்து ரூ.8000 வரை விலைபோனது. செம்மறி ஆடுகள், வெள்ளாட்டு கிடா ஆகியவற்றுக்கும் நல்ல விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    7 கிலோ கொண்ட ஆடு ரூ.4500 முதல் ரூ.5500 வரை விற்பனையானது. மதுரையில் இருந்து அதிகளவில் வியாபாரிகள் ஆடு மற்றும் கோழிகளை வாங்க வந்திருந்தனர். தொடர்ந்து ஆடி மாதம் முழுவதும் திருவிழாக்கள் இருக்கும் என்பதால் கூட்டம் களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகளவில் விவசாயிகள், வியாபாரிகள் கூடும் வாரச்சந்தையில் மின்விளக்கு மற்றும் குடிநீர் வசதி செய்து தரவேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாக உள்ளது.

    வாரச்சந்தை பகுதி குண்டும் குழியுமாக இருப்பதால் மழை காலத்தில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×