என் மலர்
உள்ளூர் செய்திகள்

பண்ணந்தூர் அருகே சுடுகாட்டுக்கு செல்லும் பாதை அமைக்கும் பணி தடைபட்டுள்ளது.
சுடுகாட்டுக்கு செல்லும் பாதை ஆக்கிரமிப்பு - மக்கள் அவதி
- சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
- சாலையை பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த பண்ணந்தூர் அருகேயுள்ளது ஆத்துக்கொல்லை கிராமம். இந்த பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த கிராம மக்கள் இறந்தவர்கள் உடலை ஆத்துக்கொல்லை கிராமத்தை ஒட்டியவாறு செல்லும் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் புதைப்பது வழக்கம்.
இந்த சுடுகாட்டிற்கு செல்லும் பாதையை அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக பயன்படுத்தி வந்த நிலையில் அந்த பாதையை சிமென்ட் சாலையாக மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை அதே பகுதியை சேர்ந்த ஒருவர் தடுத்து பாதையை துண்டிப்பு செய்து தகராறில் ஈடுபட்டு வருகிறார்.
இதனால் இந்த பகுதி மக்கள் சாலையை பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் இதுகுறித்து அதிகாரிகள் கவனத்தில் கொண்டு சென்றும் எவ்வித நடவடிக்கை இல்லை என இப்பகுதி மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.






