என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மயிலாடும்பாறையில் மாற்றுத்திறனாளி தம்பதிக்கு வீடு வழங்க ஊராட்சி நிர்வாகம் முடிவு
    X

    குடியிருப்பை இழந்த மாற்றுத்திறனாளி தம்பதிக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் வீடு வழங்க இடம் தேர்வு செய்யப்பட்டது.

    மயிலாடும்பாறையில் மாற்றுத்திறனாளி தம்பதிக்கு வீடு வழங்க ஊராட்சி நிர்வாகம் முடிவு

    • கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஐகோர்ட்டு தீர்ப்பின்படி அந்த நிலத்தில் இருந்த மாற்றுத்திறனாளி வீடு உள்பட 4 வீடுகளும் போலீஸ் பாதுகாப்போடு இடித்து அகற்றப்பட்டது.
    • 2 நாட்களுக்குள் பார்வையற்ற தம்பதிக்கு பட்டா வழங்கப்பட்டு அதன் பின்னர் பொதுமக்களிடம் நன்கொடை வசூல் செய்து புதிய வீடு கட்டும் பணிகள் தொடங்கும் என ஊராட்சி நிர்வாகத்தினர் தெரி வித்தனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் மயிலாடும்பாறையில் மொக்கச்சாமி என்பவருக்கு சொந்தமான நிலத்தின் ஒரு பகுதியில் பார்வையற்ற தம்பதியான ஜெயபால்-நிர்மலா உள்பட 4 பேர் வீடு கட்டி 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வந்தனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மொக்கச்சாமி தனது நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பு களை அகற்றக்கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஐகோர்ட்டு தீர்ப்பின்படி அந்த நிலத்தில் இருந்த 4 வீடுகளும் போலீஸ் பாதுகாப்போடு இடித்து அகற்றப்பட்டது. இது தொடர்பாக கடந்த வாரம் மயிலாடும்பாறை கிராம கமிட்டியினர் ஆலோசனை கூட்டம் நடத்தி பார்வையற்ற தம்பதிக்கு பொதுமக்கள் சார்பில் மயிலாடும்பாறை யில் புதிய இடம் தேர்வு செய்து அதில் வீடு கட்டிக் கொடுக்க முடிவு செய்தனர்.

    இதனைத் தொடர்ந்து இடம் தேர்வு செய்வது தொடர்பாக மயிலாடும்பா றை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வார்டு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் மயிலாடும்பாறை கிளை நூலகம் அருகே ஊராட்சிக்கு சொந்தமான இடத்தை பார்வையற்ற தம்பதிக்கு வழங்க தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

    இதைத்தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் பார்வதி அன்பில் சுந்தரம் மற்றும் வார்டு உறுப்பி னர்கள் புதிய இடத்தை ஆய்வு மேற்கொண்டு வருவாய்த்துறையினர் மூலம் முறையாக அளவீடு செய்தனர். அளவீடு பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து 2 நாட்களுக்குள் பார்வையற்ற தம்பதிக்கு பட்டா வழங்கப்பட்டு அதன் பின்னர் பொதுமக்களிடம் நன்கொடை வசூல் செய்து புதிய வீடு கட்டும் பணிகள் தொடங்கும் என ஊராட்சி நிர்வாகத்தினர் தெரி வித்தனர்.

    இந்த ஆய்வின் போது பிச்சை யம்மாள்சடை யாண்டி, சுரேஷ்பாண்டி, பாண்டியம்மாள் உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×