என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள மைதானத்தை   மீட்டுத்தர வேண்டும்
    X

    ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள மைதானத்தை மீட்டுத்தர வேண்டும்

    • சட்ட விரோதமாக ஆக்கிரமிப்பு செய்து தனதாக்க வேண்டி, போலி ஆவணம் மூலம் உரிமை கோரி மிரட்டி வருகிறார்.
    • அரசு பொது பயன்பாட்டுக்கும் கொண்டுவர நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் எருமியாம்பட்டி கிராம ஊர் கவுண்டர் ராமசாமி மற்றும் பொதுமக்கள் சேர்ந்து தருமபுரி கலெக்டரிடம் ஒரு புகார் மனு அளித்துள்ளனர்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    எருமியாம்பட்டி பிரமுகர் ஒருவர் வணிக நோக்கத்துடன் தனது நிறுவனத்தை விரிவாக்கம் செய்ய அரசு பொது பயன்பாட்டு மைதான நிலத்தை சட்ட விரோதமாக ஆக்கிரமிப்பு செய்து தனதாக்க வேண்டி, போலி ஆவணம் மூலம் உரிமை கோரி மிரட்டி வருகிறார்.

    இது குறித்து கடந்த 2013-முதல் பலமுறை கிராம நிர்வாக அலுவலர் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் மூலம் ஆக்கிரமிப்பை அகற்றவும், வாகனங்களை பொது இடத்தில் நிறுத்தி இடையூறு செய்வதை தடை செய்யவும் அறிவுறுத்தப்பட்டது. இதனை ஏற்க மறுத்து அத்துமீறலில் ஈடுபட்டு அச்சுறுத்தி வருகிறார்.

    அவருக்கு பக்கபலமாக தற்போதைய ஊராட்சி மன்ற தலைவர் உள்ளதாகவும், அவரை யாரும் எதுவும் செய்ய முடியாது எனவும் கூறி வருகிறார்.

    எனவே அரசு பொது பயன்பாட்டு மைதான ஆக்கிரமிப்பை தடுத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கும் மற்றும் அரசு பொது பயன்பாட்டுக்கும் கொண்டுவர நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

    இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×