search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அடுத்தவர் வயலில் நெல் அறுவடை செய்ததோடு கொலை மிரட்டலும் விடுத்த கும்பல் மீது வழக்கு
    X

    அறுவடை பணி நடைபெற்று வந்தது.

    அடுத்தவர் வயலில் நெல் அறுவடை செய்ததோடு கொலை மிரட்டலும் விடுத்த கும்பல் மீது வழக்கு

    • அங்கு வந்து நெல் அறுவடை எந்திரம் கொண்டு நிஜாமுதீன் வயலில் நெல்லை அறுவடை செய்துள்ளார்.
    • அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக தனது வயலுக்கு வந்து பார்த்தபோது அதிர்ந்து போனார்.

    கும்பகோணம்: மீது போலீசார் வழக்கு

    கும்பகோணம் அருகே உள்ள ஆவணியாபுரம் பகுதி சதாம்உசேன் தெருவை சேர்ந்தவர் நிஜாமுதீன் (வயது 52). இவருக்கு சொந்தமான நஞ்சை நிலம் மருத்துவகுடி கிராமத்தில் உள்ளது.

    இதில் நிஜாமுதீன் விவசாயம் செய்து வந்தார். கடந்த சில மாதங்களாக கடன் வாங்கி குறுவை சாகுபடி செய்து வந்தார். தற்போது குறுவை நெல் அறுவடைக்கு தயாராக இருந்தது. நேற்று காலை வயலுக்கு சென்ற நிஜாமுதீன் நெல் அறுவடைக்கு தயாராக இருப்பதை கண்டு அதற்கான பணிகளில் ஈடுபட்ட நினைத்து வீடு திரும்பினார்.

    இந்நிலையில் நேற்று மதியம் மேலமருத்துவக்குடி பட்டவெளி தெருவை சேர்ந்த பழனிச்சாமி(38) என்பவர் சிலருடன் அங்கு வந்து நெல் அறுவடை எந்திரம் கொண்டு நிஜாமுதீன் வயலில் நெல்லை அறுவடை செய்துள்ளார்.

    இதைப்பார்த்த அப்பகுதியை சேர்ந்த சிலர் இதுபற்றி நிஜாமுதீனுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக தனது வயலுக்கு வந்து பார்த்தபோது அதிர்ந்து போனார்.

    அங்கு எந்திரத்தை கொண்டு தனது வயலில் தன் உழைப்பில் சாகுபடி செய்யப்பட்டிருந்த குறுவை நெல்லை பழனிசாமி மற்றும் சிலர் மும்முரமாக அறுவடை செய்தது தெரியவந்தது.

    இதுபற்றி நிஜாமுதீன் பழனிச்சாமி யிடம் சென்று எப்படி என் வயலில் நீங்கள் அறுவடை செய்யலாம் என்று தட்டிக் கேட்டுள்ளார்.

    அப்போது பழனிசாமி மற்றும் அவருடன் வந்த கும்பல் நிஜாமுதீனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இதனால் செய்வதறியாது தவித்த நிஜாமுதீன் உடனடியாக சென்று திருநீலக்குடி போலீசில் புகார் செய்தார்.

    இதுபற்றி போலீசார் பழனிச்சாமி உள்ளிட்ட சிலர் மீது வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

    மற்றொருவர் உழைப்பில் விளைந்த நெல்லை ஒரு கும்பல் அறுவடை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×