என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பணிகள் முடிந்தும் திறக்கப்படாமல் இருக்கும் புதிய வேளாண் மைய கட்டிடம்
    X

    புதியதாக கட்டப்பட்ட வேளாண் விரிவாக்க மைய கட்டிடம்.

    பணிகள் முடிந்தும் திறக்கப்படாமல் இருக்கும் புதிய வேளாண் மைய கட்டிடம்

    • கடந்த இரண்டு ஆண்டுக்கும் மேலாக அங்கேயே தற்காலிகமாக செயல்பட்டு வந்தது.
    • ரூ. 30 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது.

    மெலட்டூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா. மெலட்டூரில் செயல்பட்டு வந்த சரக வேளாண்மை விரிவாக்க மைய அலுவலக கட்டிடம் பழுதடைந்து இடிந்து விழும் நிலை ஏற்பட்டதால் மெலட்டூரில் செயல்பட்டு வந்த வேளாண் விரிவாக்க மைய அலுவலகம் மற்றும் உரகிடங்கு ஆகியவற்றை மெலட்டூரில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அன்னப்பன்பேட்டை பகுதிக்கு மாற்றப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுக்கும் மேலாக அங்கேயே தற்காலிகமாக செயல்பட்டு வந்தது.

    அதனால் விவசாயிகள் உரம், விதைகள், என தங்களது அனைத்து தேவைக்கும் அன்னப்பன்பேட்டை செல்ல வேண்டி இருந்தது.

    அதனால் பழுதடைந்த வேளாண் விரிவாக்க மைய கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.

    விவசாயிகளின் கோரிக்கையை அரசு ஏற்று மெலட்டூரில் பழுதடைந்த வேளாண் விரிவாக்க மைய கட்டிடத்தை இடித்துவிட்டு சுமார் 30 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது.

    கட்டுமான பணிகள் முடிந்து பல மாதங்களாகியும் புதிய கட்டிடம் இன்னும் திறக்கப்படாமல் பூட்டிய நிலையில் பயனற்று கிடக்கிறது.

    மெலட்டூரில் புதியதாக கட்டப்பட்டுள்ள வேளாண்மை விரிவாக்க மைய புதிய கட்டிடத்தை அரசு உடனடியாக திறந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

    Next Story
    ×