search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாதாள சாக்கடை கழிவு நீரை சாக்கடை கால்வாயில் திருப்பி விட்ட நிர்வாகம்
    X

    பாதாள சாக்கடை நீரை குழி வெட்டி சாக்கடை கால்வாயில் விட்டுள்ள காட்சி.

    பாதாள சாக்கடை கழிவு நீரை சாக்கடை கால்வாயில் திருப்பி விட்ட நிர்வாகம்

    • சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்பட்டு வெளியேறிய ரோடில் ஆறாக ஓடியது.
    • துர்நாற்றத்தின் காரணமாக 15 நாட்களுக்கும் மேலாக அவதி அடைந்து வருகின்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி தகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் வசித்துவருகின்றனர். கடந்த 2010-ம் ஆண்டு தருமபுரி நகராட்சியில் 32 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டம் தொடங்கப்பட்டது.

    19 வார்டுகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டம் நிறைவேற்றப்படாத 14 வார்டுகளில் செயல்படுத்த கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தருமபுரி பஸ் ஸ்டாண்ட் முகமது அலி கிளப் ரோட்டில் பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்பட்டு வெளியேறிய ரோடில் ஆறாக ஓடியது.

    பின்னர் அந்த கழிவுநீரை பாதாள சாக்கடை பகுதியில் இருந்து பள்ளம் தோண்டி சாக்கடை கால்வாயில் திருப்பி விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக பஸ் ஸ்டாண்டில் இருந்து வரும் பஸ்கள் செல்ல சிரமம் ஏற்பட்டு வருகிறது.

    மேலும் முகமது கிளப் ரோட்டில் கடை வைத்திருக்கும் வணிகர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் துர்நாற்றத்தின் காரணமாக 15 நாட்களுக்கும் மேலாக அவதி அடைந்து வருகின்றனர்.

    உடனடியாக நகராட்சி நிர்வாகம் பாதாள சாக்கடை அடைப்பை சீரமைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

    Next Story
    ×