என் மலர்
உள்ளூர் செய்திகள்

தொழிலாளியை கத்தியால் குத்தியவர் கைது
- குமாரபாளையத்தில் தொழிலாளிக்கு கத்திகுத்து விழுந்தது.
- அவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
குமாரபாளையம்:
குமாரபாளையம் அருகே ஜீவா நகர் பகுதியை சேர்ந்த வர் அருண்(வயது 31), கூலித்தொழிலாளி. இவரது வீட்டின் பின்னால் உள்ள சிவராஜ்(45) என்பவரின் வீட்டிற்கு அருண் சென்றார். அப்போது,அங்கு சிவராஜுடன், கல்லங்காட்டுவலசு பகுதியை சேர்ந்த தங்கவேல் தகராறில் ஈடுபட்டார்.
இதனை அருண் தட்டி கேட்க, ஆத்திரமடைந்த தங்கவேல் கட்டையால் அருண் தலையில் தாக்கியதுடன், மறைத்து வைத்திருந்த கத்தியால் வயிற்றில் குத்தினார்.
இதனால் படுகாயமடைந்த அருணை அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கவேலுவை தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று மதியம் ஆனங்கூர் சாலை, மேட்டுக்கடை பஸ் நிறுத்தம் பகுதியில் நின்று கொண்டிருந்த தங்கவேலுவை குமாரபாளையம் போலீசார் கைது செய்தனர்.
Next Story






