search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நோய்கொடுமையால் விபரீதம் ஒரே அறையில் விஷம் குடித்து மயங்கி கிடந்த தம்பதி கணவர் பலி, மனைவி கவலைக்கிடம்
    X

    பலியான காமாட்சியப்பன் மற்றும் சிகிச்சையில் உள்ள தவமணி.

    நோய்கொடுமையால் விபரீதம் ஒரே அறையில் விஷம் குடித்து மயங்கி கிடந்த தம்பதி கணவர் பலி, மனைவி கவலைக்கிடம்

    • நோய்கொடுமையால் கணவன்-மனைவி இருவரும் மனமுடைந்து விஷம் குடித்தனர்.
    • இதில் கணவர் பலியான நிலையில் மனைவி சிசிக்சை பெற்று வருகிறார்.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பம் நந்தகோபாலன் கோவில் தெற்குதெருவை சேர்ந்தவர் காமாட்சியப்பன்(83). இவருக்கு தவமணி(75) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். மகன்களுக்கு திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். கணவன்-மனைவி இருவரும் நந்தகோபாலன்தெருவில் வசித்து வந்தனர். கடந்த சில ஆண்டுகளாக தவமணிக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்தார்.

    மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற நிலையில் பின்னர் கம்பம் அரசு ஆஸ்பத்திரியிலேயே மருந்து மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டு வந்தார். இதனால் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இரவு நேரத்தில் மூச்சுவிட முடியாமல் அவதிப்பட்டு வந்தார். மனைவியின் நிலையை பார்த்து கணவர் காமாட்சியப்பனும் கவலை யடைந்தார்.

    இதனால் யாருக்கும் தொந்தரவு செய்யாமல் நாம் 2 பேரும் தற்கொலை செய்து கொள்ளலாம் என அவர்கள் பேசி முடிவு செய்தனர். அதன்படி இருவரும் விஷம்குடித்து தங்கள் அறையில் மயங்கி கிடந்தனர். இன்று காலை அவர்களுக்கு உணவு கொடுப்பதற்காக மகன் ரவி வந்தார். வீட்டை தட்டியபோது கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்து பின்பக்கமாக உள்ளே வந்து பார்த்தார்.

    அப்போது காமாட்சியப்பன் மற்றும் அவரது மனைவி 2 பேரும் மயங்கிய நிலையில் கிடந்தனர். உடடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தார். ஆனால் வரும் வழியிலேயே காமாட்சியப்பன் உயிரிழந்தார். தவமணி மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து கம்பம் தெற்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×