search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்- கனிமொழி எம்.பி., உறுதி
    X

    கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசிய காட்சி. அருகில் கலெக்டர் செந்தில்ராஜ், சண்முகையா எம்.எல்.ஏ, மாப்பிள்ளையூரணி ஊராட்சி தலைவர் சரவணக்குமார் மற்றும் பலர் உள்ளனர்.

    கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்- கனிமொழி எம்.பி., உறுதி

    • மக்களை அதிகமாக சந்திக்கவேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
    • பொதுமக்கள் வைத்துள்ள கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று கனிமொழி எம்.பி பேசினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் மே தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது. மாப்பிளையூரணி ஊராட்சி ராம்தாஸ் நகரில் ஊராட்சி தலைவர் சரவணக்குமார் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கனிமொழி எம்.பி., அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பொதுமக்கள் கலந்துகொண்டு கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

    கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

    கிராமங்களில் மக்களை அதிகமாக சந்திக்கவேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தேர்தலுக்கு முன்பே கிராம சபை கூட்டங்களை நடத்தி மனுக்களை பெற்று நடவடிக்கை எடுத்துள்ளோம். ஊராட்சி தலைவர் சரவணக்குமார், ஊராட்சி வளர்ச்சிக்காக தீவிரமாக செயல்படுகிறார். அரசின் திட்டங்களை ஊராட்சிக்கு பெறுவதில் முழு கவனமுடன் உழைக்கிறார். என்னை சந்திக்கும்போதெல்லாம் ஏதாவது ஒரு திட்டங்களை கோரிக்கைகளாக வைப்பார். கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் வைத்துள்ள கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று கூறினார்.

    கூட்டத்தில் சண்முகையா எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், கூடுதல் கலெக்டர் தாக்ரே சுபம் ஞானதேவ்ராவ், வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்ம சக்தி, ஊராட்சி உதவி இயக்குனர் உலகநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹெலன் பொன்மணி, வசந்தா மற்றும் அதிகாரிகள் ,அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் ஜெயகுமார் நன்றி கூறினார். கூட்டுடன்காடு ஊராட்சி தலைவர் மாங்கனி தலைமையில்

    கீழ கூட்டுடன்காட்டு ஆலமரத்தடியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் துணைத்தலைவர், ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். ஊராட்சி செயலர் கோமதி வளர்ச்சி பணிகள் குறித்த தீர்மானங்களை வாசித்து நிறைவேற்றினார். முள்ளக்காடு ஊராட்சி கிராம நிர்வாக அலுவலகம் முன்பாக ஊராட்சித் தலைவர் கோபிநாத்நிர்மல் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் துணைத்தலைவர், ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். ஊராட்சி செயலர் சங்கர ராமசுப்பிரமணியன் வரவேற்று வளர்ச்சி பணிகள் குறித்த தீர்மானங்களை வாசித்து நிறைவேற்றினார்.

    கோரம்பள்ளம் ஊராட்சி பெரியநாயகிபுரத்தில் ஊராட்சித் தலைவர் செல்வபிரபா அதிசயராஜ் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் துணைத்தலைவர் பொன்மாரி செல்வராஜ் , ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர் .ஊராட்சி செயலர் சீனிராசு வரவேற்று வளர்ச்சி பணிகள் குறித்த தீர்மானங்களை வாசித்து நிறைவேற்றினார்.

    இதேபோல் ஒன்றியத்தில் கிராம சபை கூட்டங்கள் குமரகிரி ஊராட்சித்தலைவர் ஜாக்சன் துரைமணி, மறவன்மடம் ஊராட்சித்தலைவர் லில்லிமலர், குலையன்கரிசல் ஊராட்சித்தலைவர் முக்கனி, கீழதட்டப்பாறை ஊராட்சித்தலைவர் பத்மா பொன்னுச்சாமி, அய்யனடப்பு ஊராட்சித்தலைவர் அதிஷ்ட கணபதி ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்று வளர்ச்சி பணிகள் குறித்த தீர்மானங்கள் வாசித்து நிறைவேற்றபட்டது.

    Next Story
    ×