search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொதுமக்களிடம் நேரடியாக சென்று  குறைகளை கேட்ட மாநக ராட்சி கமிஷனர்
    X

    பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்ட மாநக ராட்சி கமிஷனர்

    • தூய்மை பணிகளை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
    • வசதிகளை முறையாக மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் இன்று மண்டலம் 1, 15 வேலம்பாளையம் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வார்டு எண் 12, 15வேலம்பாளையம் பகுதியில் உள்ள சொர்ணபுரி அவன்யூவில் தூய்மை பணிகளை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    தொடர்ந்து மண்டலம் 1க்கு உட்பட்ட பகுதிகளில் பயன்படுத்தப்படும் வாகனங்கள் நிலை மற்றும் பயன்பாடுகள் குறித்தும், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் தரம் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி சேவைகளை வழங்கவும், உட்கட்டமைப்பு வசதிகளை முறையாக மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    Next Story
    ×